பக்கா மாஸ்.. ரூ.13000 விலைக்கு குறைந்த Realme 5G மொபைல்.. வரிசையாக ஆர்டர் போடும் மக்கள்.. எந்த மாடல் தெரியுமா?
ரியல்மி (Realme) நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரியல்மி நர்ஸோ 70 5ஜி (Realme NARZO 70 5G) என்ற ஸ்மார்ட்போன் மாடலை ரூ. 15,999 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. தற்போது ரியல்மி நிறுவனம் ஒரு சிறப்பு சலுகையை இந்திய வடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக அறிவித்துள்ளது. அதிரடியாக இதன் விலையை ரூ.13,999 வரை குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விலையில் புதிய ரியல்மி நர்ஸோ 70 5ஜி (Realme NARZO 70 5G) எப்படி வாங்குவது? என்ற தகவலை இப்போது பார்க்கலாம்.
ரியல்மி நர்ஸோ 70 5ஜி (Realme NARZO 70 5G) ஸ்மார்ட்போன் மாடலை realme.com மற்றும் Amazon.in இல் வழியாக வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 2000 மதிப்பிலான கூப்பன் தள்ளுபடியுடன் இந்த புதிய விலையில் ஸ்மார்ட்போனை வாங்க மீதும். இந்த போன் மீது தற்போது மூன்று மாத கட்டணமில்லா EMI விருப்பமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை இரண்டு ஸ்டோரேஜ் விருப்பத்திற்க்கும் பொருந்தும்.

ரியல்மி நர்ஸோ 70 5ஜி புது விலை (Realme NARZO 70 5G New Price):
ரியல்மி நர்ஸோ 70 5ஜி போனின் 6GB+128GB மாடல் ரூ. 15,999 என்ற அசல் விலையுடன் வருகிறது. இதன் மீது ரூ. 2000 சிறப்பு தலுப்படு செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ. 13,999 விலையில் இந்த போனை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். அதேபோல், இதன் 8GB+128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ. 16,999 என்ற அசல் விலையில் இருந்து ரூ. 2000 குறைக்கப்பட்டு தற்போது ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ரியல்மி நர்ஸோ 70 5ஜி சிறப்பம்சம் (Realme NARZO 70 5G Specifications):
Realme NARZO 70 5G ஆனது 2400 × 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட பெரிய 6.7" இன்ச் முழு HD+ AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 120Hz வரையிலான ரெஃப்ரஷ் ரேட் உடன் 2000 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இது ஆக்டா-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 7050 சிப்செட் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு ரேம் வகைகளில் வருகிறது.
இதில் ஒன்று 6GB LPDDR4X ரேம் மற்றும் மற்றொன்று 8GB LPDDR4X ரேம் உடன் வருகிறது. இவை 128GB அல்லது 256GB UFS3.1 ஸ்டோரேஜ் உடன் இனிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1TB ஸ்டோரேஜ் ஆதரவையும் பெறுகிறது. இது 50MP + 2MP சென்சார் மற்றும் எல்இடி ப்ளாஷ் உடன் டூயல் கேமராவை வழங்குகிறது. முன்பக்கத்தில் 16MP செல்பி கேமரா உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 5G SA/NSA, Dual4G VoLTE, Wi-Fi6802.11 ax (2.4GHzand5GHz), புளூடூத்5.2, மற்றும் GPS/GLONASS/Beidou உட்பட பல இணைப்பு விருப்பங்களை ஆதரிக்கிறது. இந்த சாதனத்தில் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 45W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. பாஸ்ட் சார்ஜிங் உடன் மிகவும் தரமான பட்ஜெட் செக்மென்ட் 5ஜி போனாக இந்த சாதனம் வருகிறது.


Click it and Unblock the Notifications








