Home
Mobile

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 8GB ரேம்.. 2TB மெமரி.. 50MP கேமரா.. யாரு விடுவா?

வெறும் ரூ.12,000 பட்ஜெட்டில் 50 எம்பி கேமரா, 2 டிபி மெமரி சப்போர்ட், 5000mAh பேட்டரி, 33W சூப்பர்வூக் சார்ஜிங் போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களுடன் அறிமுகமான ரியல்மி நார்சோ 60 எக்ஸ் (Realme Narzo 60x) போன் அமேசானில் விற்பனைக்கு வந்துள்ளது.

ரியல்மி நார்சோ 60 எக்ஸ் அம்சங்கள் (Realme Narzo 60x Specifications): இந்த ரியல்மி போன் 6.72 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (Full HD+) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz டைனாமிக் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.

ரூ.11,999 பட்ஜெட்ல 8GB ரேம்.. 2TB மெமரி.. 50MP கேமரா.. யாரு விடுவா?

அதோடு 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 மற்றும் ரியல்மி யுஐ 4.0 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6100+ 6nm) சிப்செட் வருகிறது. ஆர்ம் மாலி - ஜி57 எம்சி 2 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது.

இந்த ரியல்மி போன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் 6 ஜிபி ரேம் போனில் கூடுதலாக 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2 டிபி மெமரி சப்போர்ட் வருகிறது.

இந்த போன் எல்இடி பிளாஷ் லைட்டுடன் கூடிய டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டிருக்கிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமராவானது, 2 எம்பி போர்ட்ராய்டு கேமராவோடு வருகிறது. இதுவொரு ஏஐ (AI) கேமராவாகும். இதில் ப்ரோலைட் இமேஜிங் (ProLight Imaging) சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே, இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ள நைட்ஸ்கேப் மோட்டில் (Nightscape Mode) போட்டோக்களை எடுத்தால் மிகுந்த கிளாரிட்டி கிடைக்கும். அதேபோல ஸ்ட்ரீட் போட்டோகிராபி மோட் (Street Photography Mode), சினிமாடிக் மோட் (Cinematic Mode) போன்றவை வருகின்றன.

8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரியல்மி நார்சோ மாடலில் 33W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh வருகிறது. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் வெறும் 29 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜிங் செய்து கொள்ள முடியும். டூயல் நானோ சிம் (Dual Nano SIM) மற்றும் மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சிலாட் வருகிறது.

சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) போன்ற அம்சங்கள் வருகின்றன. இந்த போன் ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்களை கொண்டிருக்கிறது.

இந்த ரியல்மி நார்சோ 60 எக்ஸ் போன் ஸ்டெல்லர் கிரீன் (Stellar Green) மற்றும் நெபுலா பர்பிள் (Nebula Purple) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,999 ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,499ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த போன் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது அமேசான் (Amazon) தளத்தில் முதல் லைவ் சேலுக்கு (First Live Sale) வந்துள்ளது. அதோடு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சேல் சில மணி நேரங்கள் மட்டுமே நடக்க வாய்ப்புள்ளது. அதன்பின்பு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி இந்த போனின் வழக்கமான விற்பனை தொடங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Narzo 60x With 12GB RAM, 5000mAh Battery Goes on Sale in Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X