Home
Mobile

பட்டிதொட்டியெங்கும் கலக்க போகும் புது ரியல்மி 5ஜி போன்.. 50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் இன்று (6-9-2023) ரியல்மி நார்சோ 60எக்ஸ் (Realme Narzo 60x) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ரியல்மி போன் டைமன்சிட்டி, 50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கம்மி விலையில் வெளிவந்துள்ளது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 60எக்ஸ் போனின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. பின்பு இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. ஸ்டெல்லர் கிரீன் (Stellar Green) மற்றும் நெபுலா பர்பிள் (Nebula Purple) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். பின்பு இந்த போன் வரும் செப்டம்பர் 12-ம் தேதி அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும்.

பட்டிதொட்டியெங்கும் கலக்க போகும் புது ரியல்மி 5ஜி போன்..

குறிப்பாக அமேசான் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த புதிய ரியல்மி போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த ரியல்மி நார்சோ 60எக்ஸ் போனை ரூ.11,999-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த போனின் சிறப்பு அம்சங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் 1080 X 2400 பிக்சல்ஸ், 680 நிட்ஸ் ப்ரைட்னஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (MediaTek Dimensity 6100+) பிராசஸர் வசதியுடன் இந்த அசத்தலான ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதனுடன் மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு அருமையாக இருக்கும்.

அதேபோல் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி ஆகிய இரண்டு வேரியண்ட்களில் இந்த போனை வாங்க முடியும். அதேபோல் மெமரி கார்டை பயன்படுத்த இந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. பின்பு Realme UI 4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது.

பட்டிதொட்டியெங்கும் கலக்க போகும் புது ரியல்மி 5ஜி போன்..

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமராவுடன் இந்த ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இந்த போனில் சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-Mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் எடை 190 கிராம் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Narzo 60x 5G With 6GB RAM, 128GB Storage, 5000mah Battery, Sale Date Specification, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X