அள்ளி வீசுது அமேசான்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 128GB மெமரி.. ஆஃபரில் ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் தற்போது பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி நார்சோ 60எக்ஸ் 5ஜி போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் புதிய விலை மற்றும் அம்சங்களை இப்போது பார்ப்போம்.
அதாவது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி நார்சோ 60எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தற்போது 13 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.12,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.850 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ரியல்மி நார்சோ 60எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme Narzo 60X 5G specifications): 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1080 X 2400 பிக்சல்ஸ், 680 நிட்ஸ் ப்ரைட்னஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (MediaTek Dimensity 6100+)பிராசஸர் வசதியுடவெளிவந்துள்ளது. மேலும் இதனுடன் மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும் எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
அதேபோல் Realme UI 4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும்
இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு இந்த போனின் மென்பொருள் அமைப்பு மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமராவுடன் வெளிவந்துள்ளது ரியல்மி நார்சோ 60எக்ஸ். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

இந்த ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போனில் சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார்(Side-Mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போனின் எடை 190 கிராம் ஆகும். கம்மி விலையில் அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த ரியல்மி நார்சோ 60எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








