செப்டம்பர் 6 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 64எம்பி கேமரா.. வருகிறது ரியல்மி போன். எந்த மாடல்?
ரியல்மி நிறுவவனம் வரும் செப்டம்பர் 6-ம் தேதி ரியல்மி நார்சோ 60எக்ஸ் (Realme Narzo 60x) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக gizmochina இணையதளம் வெளியிட்ட தகவலின்படி, இந்த ரியல்மி நார்சோ 60எக்ஸ் போன் ஆனது அமேசானில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ரியல்மி போன் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

33 வாட்ஸ் சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போன். இதுதவிர 64எம்பி ரியர் கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 6000 சிப்செட் மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் இந்த இந்த புதிய ரியல்மி நார்சோ 60எக்ஸ் போன் வெளியாகும். மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்த ரியல்மி ஜிடி 5 (realme GT5) போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
6.74 இன்ச் ஒஎல்இடி(OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி ஜிடி 5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 2160Hz ஹை-ஃபிரிகொன்சி PWM டிம்மிங் மற்றும் 1450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஃப்ளோயிங் சில்வர் மிரர் (Flowing Silver Mirror) மற்றும் ஸ்டார் மிஸ்ட் ஒயாசிஸ் (Star Mist Oasis)நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரியல்மி மாடலில் 240W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4600mAh பேட்டரி உள்ளது. பின்பு 150W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5240mAh பேட்டரி கொண்ட வேரியண்ட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 240 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மாடலை வாங்கும் பயனர்கள் 9 நிமிடங்களில் பேட்டரியை முழு சார்ஜ் அதாவது 100 சதவீதம் சார்ஜ் செய்துவிட முடியும்.
அதேபோல் 150 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மாடலை வாங்கும் பயனர்கள் 7 நிமிடங்களில் பேட்டரியை 50 சதவீதம் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் சூப்பர்வூக் எஸ் பவர் மேனேஜ்மென்ட் சிப் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 5 போன். யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 4என்எம் (Octa Core Snapdragon 8 Gen 2 4nm) சிப்செட் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 5 ஸ்மார்போன். மேலும் ரியல்மி யுஐ 4.0 ஓஎஸ் (realme UI 4.0 OS) மற்றும் அட்ரினோ 740 ஜிபியு (Adreno 740 GPU) கிராபிக்ஸ் கார்டும் இந்த போனில் உள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது.

2ஜி/16ஜிபி/24ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி/1டிபி ஸ்டோரேஜ் ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 5 ஸ்மார்ட்போன். இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 5 ஸ்மார்ட்போன். மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 7, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 5.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சார் (Sony IMX890 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஜிடி 5 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும் வீயோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








