Home
Mobile

யாருப்பா இந்த மார்டின் அரிசோன்? 61 டிகிரி கர்வ்ட் டிஸ்பிளே.. 1 டிபி ஸ்டோரேஜ்.. எந்த மாடல்?

மிட்-ரேன்ஞ் விலையில் ப்ரீமியம் கேமிங் அனுபவத்தை கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் ரியல்மி நார்சோ 60 சீரிஸ் (Realme Narzo 60 Series) மாடல்கள், 61 டிகிரி கர்வ்ட் டிஸ்பிளேவில் பின்னி எடுக்கிறது. இப்போது, 1 டிபி ஸ்டோரேஜ் வரிசையிலும் சேர்ந்து விட்டது.

ஒட்டுமொத்த கேமிங் பிரியர்களின் எதிர்பார்ப்பையும் எகிற வைத்த போன்கள் என்றால், அது ரியல்மி நார்சோ 60 சீரிஸ் மாடல்கள்தான். ஏனென்றால், 61 டிகிரி கர்வ்ட் டிஸ்பிளே, 1 டிபி ஸ்டோரேஜ், 360Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்டிருக்கிறது. கூடவே கேமரா பிரியர்களை அளித்தூக்கும் வகையில், 100 எம்பி கேமராவை கொண்டுள்ளது.

யார் இந்த மார்டின் அரிசோன்? 61 டிகிரி கர்வ்ட் டிஸ்பிளே! 1 டிபி மெமரி!

டிசைனிலும் கண்களை கவர்கிறது. இந்த சீரிஸ் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல்கள் குறித்த முழு தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், லேட்டஸ்ட் அப்டேட்டாக மார்டின் அரிசோன் (Martian Horizon) என்ற பெயரில் ஆரஞ்சு நிற லெதர் ஃபினிஷிங்கில் வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ரியல்மி நார்சோ 60 சீரிஸ் போன்கள், ரியல்மி 11 ப்ரோ போனின் ரீபிராண்ட் என்பதால், அந்த போனின் பெரும்பாலான அம்சங்களை இந்த போன்களிலும் எதிர்பார்க்கலாம். ஆகவே, இந்த நேரத்தில் ரியல்மி 11 ப்ரோ போனில் கொடுக்கப்பட்ட அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

ரியல்மி 11 ப்ரோ அம்சங்கள் (Realme 11 Pro Specifications): இந்த ரியல்மி போன் 6.7 இன்ச் (1080*2412 பிக்சல்ஸ்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate) வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 ( MediaTek Dimensity 7050) சிப்செட் வருகிறது. அதோடு மாலி ஜி68 ஜிபியு (Mali-G68 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரியல்மி 11 ப்ரோ போன் 12 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

இந்த போன் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டிருக்கிறது. அதன்படி 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் வருகிறது. ஆனால், ரியல்மி நார்சோ 60 சீரிஸ் போன்களில் 100 எம்பி கேமரா வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் விலையை பொறுத்தவரையில் ரியல்மி 11 ப்ரோ மாடல் ரூ.23,999 க்கும், ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடல் ரூ.27,999 க்கும் விற்பனைக்கு வந்துள்ளது. ஆகவே, ரியல்மி நார்சோ 60 சீரிஸ் போன்களும் ரூ.30 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதேபோல, இந்த சீரிஸில் ரியல்மி நார்சோ 60 மற்றும் ரியல்மி நார்சோ 60 ப்ரோ ஆகிய மாடல்களாக வெளியாகலாம். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Realme Narzo 60 Series Price, Specifications in India, Tipped To Launch With 1TB Storage
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X