மிஸ் பண்ணிடாதீங்க.. 64MP கேமரா.. 128GB மெமரி.. 33W சார்ஜிங்.. ஆஃபரில் ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
பண்டிகை காலம் என்பதால் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளன. அதன்படி இப்போது அமேசன் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் அட்டகாசமான ரியல்மி நார்சோ 60 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி நார்சோ 60 5ஜி (realme narzo 60 5G) ஸ்மார்ட்போன் முன்பு ரூ.19,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அமேசான் தளத்தில் இந்த போனுக்கு 21 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே ரியல்மி நார்சோ 60 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.15,749 விலையில் வாங்க முடியும்.

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி உள்ளது. இப்போது ரியல்மி நார்சோ 60 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
33 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜிங் (33W SUPERVOOC Charger) கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி நார்சோ 60 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) ஆதரவு கொண்ட 6.43-இன்ச் Super AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 60 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 1080 X 2400 பிக்சல்ஸ், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் (1000 nits brightness), 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் ( 180Hz touch sampling rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 (MediaTek Dimensity 6020) பிராசஸர் வசதியுடன் இந்த அசத்தலான ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதனுடன் மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு அருமையாக இருக்கும்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த அசத்தலான ரியல்மி நார்சோ 60 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமராவுடன் இந்த ரியல்மி நார்சோ 60 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இந்த போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் (In-display fingerprint sensor) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 5ஜிஇ 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.1, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரியல்மி நார்சோ 60எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் எடை 190 கிராம் ஆகும்.
அதேபோல் ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








