பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் ஒரு ரியல்மி போன் வேண்டுமா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.!

|

ரியல்மி நிறுவனம் சியோமி, விவோ நிறுவனங்களுக்கு போட்டியாக பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களும் அசத்தலான அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

ரியல்மி நார்சோ 50ஐ பிரைம்

ரியல்மி நார்சோ 50ஐ பிரைம்

NBTC, EED, FCC மற்றும் BIS இணையதளங்களில் இந்த ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் கசிந்துள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

மாஸ் காட்டும் ஏர்டெல்: விஐ, ஜியோ வழங்கிடாத இரண்டு தனித்துவ ரீசார்ஜ் திட்டம்- 84 நாட்களுக்கு இலவசம்!மாஸ் காட்டும் ஏர்டெல்: விஐ, ஜியோ வழங்கிடாத இரண்டு தனித்துவ ரீசார்ஜ் திட்டம்- 84 நாட்களுக்கு இலவசம்!

சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் RMX3506 ஆகும். அதேபோல் இந்த சாதனம் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும். பின்பு மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சாதனம்
மின்ட் கிரீன் மற்றும் டார்க் ப்ளூ நிறங்களில் அறிமுகம் செய்யப்படும்.

Jio, Airtel, Vi, BSNL: ரூ.147 முதல் முழுசா 30 நாள் வேலிடிட்டி கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்..இது ஏன் பெஸ்ட்Jio, Airtel, Vi, BSNL: ரூ.147 முதல் முழுசா 30 நாள் வேலிடிட்டி கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்..இது ஏன் பெஸ்ட்

எச்டி பிளஸ் டிஸ்பிளே

எச்டி பிளஸ் டிஸ்பிளே

ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி உள்ளது. பெரிய திரை என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

அதிகரிக்கும் கொரோனா பரவல்- கட்டாயம் வீட்டில் இருக்க வேண்டிய சாதனம்: 80% தள்ளுபடியுடன் அமேசானில் வாங்கலாம்!அதிகரிக்கும் கொரோனா பரவல்- கட்டாயம் வீட்டில் இருக்க வேண்டிய சாதனம்: 80% தள்ளுபடியுடன் அமேசானில் வாங்கலாம்!

ஹீலியோ ஜி80 சிப்செட்

ஹீலியோ ஜி80 சிப்செட்

இந்த புதிய ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் கேமிங் வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும். அதேபோல் ஆப்களை (செயலிகளை) இயக்குவதற்கு மிக அருமையாக பயன்படும்
இந்த சிப்செட். மேலும் இந்த புதிய ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவரும்.

ரூ.149 விலை முதல் தினசரி டேட்டா, வாய்ஸ் கால், SMS வேண்டுமா? அப்போ இந்த Jio திட்டங்களை பாருங்க..ரூ.149 விலை முதல் தினசரி டேட்டா, வாய்ஸ் கால், SMS வேண்டுமா? அப்போ இந்த Jio திட்டங்களை பாருங்க..

பின்புறம் மூன்று கேமராக்கள்

பின்புறம் மூன்று கேமராக்கள்

அதேபோல் ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. எனவே அருமையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். ஆனால் 50எம்பி கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தால் இன்னும் அருமையாக
இருக்கும்.

கேமிங் பிரியர்களே ரெடியா: ஐக்யூ 10, ஐக்யூ 10 ப்ரோ வெளியீட்டு தேதி இதுதானா?- அம்சங்கள் வேறலெவல்!கேமிங் பிரியர்களே ரெடியா: ஐக்யூ 10, ஐக்யூ 10 ப்ரோ வெளியீட்டு தேதி இதுதானா?- அம்சங்கள் வேறலெவல்!

பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உட்பட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.

டுவிட்டர் இல்லனா யூடியூப்.,நீ வா தலைவா: யூடியூப் பக்கம் கவனத்தை திருப்பும் எலான் மஸ்க்- ஒரே மீம்., உலக ஃபேமஸ்!டுவிட்டர் இல்லனா யூடியூப்.,நீ வா தலைவா: யூடியூப் பக்கம் கவனத்தை திருப்பும் எலான் மஸ்க்- ஒரே மீம்., உலக ஃபேமஸ்!

என்ன விலையில் வெளிவரும்?

என்ன விலையில் வெளிவரும்?

புதிய ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல இணைப்பு ஆதரவுகள் உள்ளன. பின்பு இந்த புதிய சாதனம் ரூ.15,000-க்கு கீழ் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme Narzo 50i Prime smartphone will be launched soon in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X