ரூ.7,999 விலையில் புது Realme Narzo 50i Prime போனை வாங்குவது எப்படி? ஆஃப்பர் டீடெயில்ஸ்.!

|

பட்ஜெட் விலை பிரியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு Realme ஒரு நம்பகமான பிராண்ட் ஆக மாறி வருகிறது. உண்மையை, சொல்லப் போனால், இந்தியாவில் உள்ள பட்ஜெட் பிரியர்களை இந்த பிராண்ட் வெகுவாக கவர்ந்துவிட்டது. இதற்கான, முக்கியமான காரணம், குறைந்த விலையில் சிறந்த அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை வழங்குகிறது. சமீபத்தில் பட்ஜெட் செக்மென்ட்டில் நிறுவனம் அறிமுகம் செய்த மாடல் தான் புதிய Realme Narzo 50i Prime.

அமேசான் Prime உறுப்பினர்களுக்கு 1 நாள் முன் அடித்த லக்

அமேசான் Prime உறுப்பினர்களுக்கு 1 நாள் முன் அடித்த லக்

இந்த புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடலான Realme Narzo 50i Prime இந்தியாவில் Amazon நிறுவனத்தின் கிரேட் இந்திய பெஸ்டிவல் விற்பனையில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. இது நாள் முதல் அனைவருக்கும் குறைந்த விலையில் கிடைக்குமென்றாலும், அமேசான் Prime உறுப்பினர்களுக்கு இந்த டிவைஸ் ஒரு நாளுக்கு முன்னதாக, இன்று முதல் குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

Realme Narzo 50i Prime ஓபன் சேல்ஸ் எப்போது துவங்குகிறது?

Realme Narzo 50i Prime ஓபன் சேல்ஸ் எப்போது துவங்குகிறது?

வழக்கமான வாடிக்கையாளர்கள் நாளை, செப்டம்பர் 23, மதியம் 12 மணிக்கு அமேசான் மற்றும் ரியல்மி இந்தியாவின் அதிகாரப்பூர்வ சேனல்களில் இருந்து இந்த Realme Narzo 50i Prime சாதனத்தைப் பெறலாம். Realme இன் சமீபத்திய பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலான Realme GT Neo 3T, Flipkart வழியாக நாளை விற்பனைக்கு வருகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டும் தளங்களிலும் Realme சாதனங்களை நீங்கள் வாங்கலாம்.

ரூ. 30,000 விலையில் புது iPhone 12 வாங்கலாமா? எப்படி தெரியுமா? கொஞ்சம் கவனமா படிங்க.!ரூ. 30,000 விலையில் புது iPhone 12 வாங்கலாமா? எப்படி தெரியுமா? கொஞ்சம் கவனமா படிங்க.!

Realme Narzo 50i Prime ஸ்மார்ட்போனின் விலை

Realme Narzo 50i Prime ஸ்மார்ட்போனின் விலை

Realme Narzo 50i Prime 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெறும் ரூ.7,999 என்ற ஆரம்ப விலையில் அமேசான் வழியாக வாங்கக் கிடைக்கிறது. அதேபோல், இதன் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை ரூ.8,999 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. புதிய என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் சாதனம் டார்க் ப்ளூ மற்றும் மின்ட் க்ரீன் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த 2 ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல்களும் இப்போது பிரைம் உறுப்பினர்களுக்கு வாங்க கிடைக்கிறது.

Realme Narzo 50i Prime ஸ்மார்ட்போன் மீது எக்ஸ்ட்ரா சலுகையும் கிடைக்கிறதா?

Realme Narzo 50i Prime ஸ்மார்ட்போன் மீது எக்ஸ்ட்ரா சலுகையும் கிடைக்கிறதா?

அமேசான் பிரைம் உறுப்பினராக இல்லதாக வாடிக்கையாளர்கள், நாளை மதியம் 12 மணி முதல் இந்த Realme Narzo 50i Prime ஸ்மார்ட்போன் சாதனத்தை நேரடியாக அமேசான் தளத்தில் இருந்து வாங்கலாம். அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவல் விற்பனையின் ஒரு பகுதியாக, இந்த சாதனத்தின் மீது ரூ.500 தள்ளுபடி கிடைக்கிறது. இத்துடன், SBI டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுடன் உடனடி தள்ளுபடியையும் வழங்குகிறது.

OnePlus டிவியை ரூ.9,000 விலையில் வாங்க வாய்ப்பு.! OnePlus அறிவித்த கோலாகல தள்ளுபடி.!OnePlus டிவியை ரூ.9,000 விலையில் வாங்க வாய்ப்பு.! OnePlus அறிவித்த கோலாகல தள்ளுபடி.!

Realme Narzo 50i Prime சிறப்பம்சம்

Realme Narzo 50i Prime சிறப்பம்சம்

இந்த டிவைஸ் HD+ தெளிவுத்திறனுடன் 6.5' இன்ச் கொண்ட 60Hz ரெப்ரெஷ் ரேட் உடைய LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஒரு பழமையான வாட்டர் டிராப் ​​நாட்ச் ஸ்டைல் டிஸ்பிளே உடன் வருகிறது. Realme Narzo 50i Prime சாதனம் Unisoc T612 சிப்செட் மூலம் இயங்குகிறது. இது Mali-G57 GPU மூலம் ஆதரிக்கப்படுகிறது. Realme Narzo 50i Prime ஸ்டோரேஜ் விபரங்களை முன்பே பார்த்துவிட்டோம். இது மைக்ரோ SD கார்டு வழியாக 1TB வரை எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜை ஆதரிக்கிறது.

10W ஃபாஸ்ட் சார்ஜிங் கூட இருக்கிறதா?

10W ஃபாஸ்ட் சார்ஜிங் கூட இருக்கிறதா?

இந்த Realme ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 OS உடன் வருகிறது. இது 10W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது மொத்தமாக இரண்டு கேமராக்களை கொண்டுள்ளது. ஒரு கேமரா முன்பக்கத்தில், மற்றொரு கேமரா பின்பக்கத்திலும் வைக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் முன்பக்கம் 5 மெகாபிக்சல் ஷூட்டர் வழங்கப்பட்டுள்ளது. இது 4G இல் இயங்கும் மாடலாகும். கம்மியான விலையில் புது போன் வாங்க ஐடியா இருந்தால், இந்த Realme Narzo 50i Prime ஐ தவறவிடாதீர்கள்.

Best Mobiles in India

English summary
Realme Narzo 50i Prime Budget Smartphone Goes On Sale Early For Amazon Prime Members At Rs 7999

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X