Home
Mobile

விரைவில் வெளிவரும் அசத்தலான ரியல்மி நர்சோ 50ஏ ஸ்மார்ட்போன்.!

சமீபத்தில் பிஐஎஸ் இணையதளத்தில் ரியல்மி நர்சோ 50ஏ ஸ்மார்ட்போன் பற்றி தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரியல்மி நர்சோ 50ஏ ஸ்மார்ட்போன் ஆனது டூயல் டோன் வடிவமைப்பு மற்றும் ஒரு பெரிய கேமரா அமைப்புடன் வெளிவரும் என டிப்ஸ்டர் ஸ்டீவ் ஹெமர்ஸ்டாஃபர் தகவல் தெரிவித்துள்ளார்.

விரைவில் வெளிவரும் அசத்தலான ரியல்மி நர்சோ 50ஏ ஸ்மார்ட்போன்.!

அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் பின்புறம் மூன்று கேமராக்கள் மற்றும் கைரேகை ஸ்கேனர் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த சாதனம் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளிவந்துள்ளது.

ரியல்மி நர்சோ 50ஏ சாதனத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர்ஸ் ஆனது வலது பக்கத்தில் உள்ள மெல்லிய பள்ளத்திற்குள் அமர்ந்திருக்கின்றன. பின்பு 3.5 மிமீ ஹெட்போன் ஜாக், டைப்-சி போர்ட் மற்றும் ஸ்பீக்கர் கிரில் போன்ற அம்சங்கள் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளன.

வெளிவந்த தகவலின்படி ரியல்மி நர்சோ 50ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா
ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது ரியல்மி நர்சோ 50ஏ ஸ்மார்ட்போன். மேலும் சமீபத்தில் ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்து விற்பனைக்கு வந்துள்ள ரியல்மி ஜிடி 5ஜி
ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

விரைவில் வெளிவரும் அசத்தலான ரியல்மி நர்சோ 50ஏ ஸ்மார்ட்போன்.!

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம், 120Hz refresh rate உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். ரியல்மி ஜிடி 5ஜி சாதனத்தில் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய சாதனம்.

ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளதுஇந்த ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்.

விரைவில் வெளிவரும் அசத்தலான ரியல்மி நர்சோ 50ஏ ஸ்மார்ட்போன்.!

ரியல்மி ஜிடி 5ஜி சாதனத்தில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோஜாக்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Realme Narzo 50A Series May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X