ஏப்ரல் 30: இந்தியாவில் அறிமுகமாகும் அசத்தலான ரியல்மி நார்சோ 50ஏ பிரைம்.!
ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் 30-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 2,408x1,080 பிக்சல் தீர்மானம், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc T612 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக Realme UI R Edition சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் + 2எம்பி போர்ட்ரெயிட் சென்சார்என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், விடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்றே கூறலாம்.

அதேபோல் ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கருப்பு,நீலம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications