Home
Mobile

விரைவில் அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமாகும் ரியல்மி நார்சோ 50ஏ பிரைம்.!

ரியல்மி நிறுவனம் விரைவில் ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 ரியல்மி நார்சோ 50ஏ பிரைம்

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம்

இந்த ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனின் மாடல் எண் RMX3516 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போன் மாடல் 4890 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வெளிவரும் எனவே நீண்ட் நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் எனப் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம்

இந்த ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனில் 6.6-இன்ச் டிஸ்பிளே வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்ப அம்சங்களைரியல்மி நார்சோ 50ஏ பிரைம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நார்சோ 50ஏ பிரைம் மாடலில் 4ஜிபி/6ஜிபி

ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் மாடலில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனம் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

 ஸ்மார்ட்போ

அதேபோல் ரியல்மி நார்சோ 50ஏ பிரைம் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே இந்த ஸ்மார்ட்போன் 16எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்நிறுவனம்சமீபத்தில் அறிமுகம் செய்த ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 50

ரியல்மி நார்சோ 50

ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ரியல்மி நார்சோ 50 ஸ்மார்போனில் கேமிங் வசதிக்கு தகுந்தபடி மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்..

நார்சோ 50 ஸ்மா

ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் கேமரா + 2எம்பி மேக்ரோகேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே16எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது மெமரி கார்டைபயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

நார்சோ 50 ஸ்மார்ட்போ

ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுஉள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்குஅதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல இணைப்புஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். பட்ஜெட் விலையில் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களுடன் வெளிவந்துள்ளது ரியல்மி நார்சோ 50

Best Mobiles in India

English summary
Realme Narzo 50A Prime May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X