Home
Mobile

ரியல்மி நார்சோ 50ஏ, ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விவரங்கள்.!

ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி நார்சோ 50ஏ, ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பட்ஜெட் விலையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 50ஏ

ரியல்மி நார்சோ 50ஏ

ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 எனற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாகஇதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ரியல்மி நர்சோ 50ஏ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் ஏஆர்எம் Mali-G52 GPU ஆதரவு உள்ளது. மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ரியல்மி நர்சோ 50ஏ

ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + black and white portrait லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் சூப்பர் நைட்ஸ்கேப், நைட் ஃபில்டர்கள், பியூட்டி மோட், எச்டிஆர், பனோரமிக் வியூ, போர்ட்ரெய்ட் மோட், டைம்லாப்ஸ், ஸ்லோ மோஷன் போன்ற கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன்.

ரியல்மி நார்சோ 50ஏ சாதனத்தில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு அமசங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். குறிப்பாக யூஎஸ்பி டைப்-சி போர்ட், டூயல்-பேண்ட் வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், ப்ளூடூத் வி5 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ சாதனம்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ரியல்மி நார்சோ 50ஏ சாதனத்தின் விலை ரூ.11,499-ஆக உள்ளது. பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 50ஏ மாடலின் விலை ரூ.12,499-ஆக உள்ளது. ஆக்ஸிஜன் ப்ளூ மற்றும் ஆக்ஸிஜன் கிரீன் நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன்.

ரியல்மி நார்சோ 50ஐ

ரியல்மி நார்சோ 50ஐ

ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போனில் Unisoc 9863 SoC சிப்செட் வசதி உள்ளது. மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்தசாதனம் வெளிவந்துள்ளது. அதேபோல் 2ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. மேலும் ரியல்மி நார்சோ 50ஏ சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,கைரேகை சென்சார் உட்பட பல்வேறு அமசங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். குறிப்பாக யூஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ்,ப்ளூடூத் வி4.2 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ சாதனம்.

நார்சோ

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ரியல்மி நார்சோ 50ஐ சாதனத்தின் விலை ரூ.7,499-ஆக உள்ளது. பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 50ஏ மாடலின் விலை ரூ.8,499-ஆக உள்ளது. ஆக்ஸிஜன் ப்ளூ மற்றும் ஆக்ஸிஜன் கிரீன் நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த ரியல்மி நர்சோ 50ஏ ஸ்மார்ட்போன். Mint Green மற்றும் Carbon Black நிறங்களில்வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

அதேபோல் ரியல்மி நார்சோ 50ஐ மற்றும் ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன்கள் வரும் அக்டோபர் 7-ம் தேதி விற்பனைக்கு வரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Realme Narzo 50A, Narzo 50i Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X