Home
Mobile

அமேசான்: ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.!

அமேசான் தளத்தில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரியல்மி, சாம்சங், சியோமி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் வாங்க முடியும். அதேபோல் இப்போது ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

அமேசான்: ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.!

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.13,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.12,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 எனற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பெரிய டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளதால் வீடியோ உள்ளிட்ட வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும்.

அமேசான்: ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.!

அதேபோல் ரியல்மி நர்சோ 50ஏ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் ஏஆர்எம் Mali-G52 GPU ஆதரவு உள்ளது. எனவே கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு இந்த சிப்செட் மிக அருமையாக பயன்படும். மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. பின்பு விரைவில் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் இந்த ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம்.

ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + black and white portrait லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே துல்லியமான புகைப்படங்கள்
மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் சூப்பர் நைட்ஸ்கேப், நைட் ஃபில்டர்கள், பியூட்டி மோட், எச்டிஆர், பனோரமிக் வியூ, போர்ட்ரெய்ட் மோட், டைம்லாப்ஸ், ஸ்லோ மோஷன் போன்ற கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ.

அமேசான்: ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.!

ரியல்மி நார்சோ 50ஏ சாதனத்தில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல தரமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக 6000 எம்ஏஎச் பேட்டரி இருப்பதால் அதிக நேரம் கேம் விளையாட முடியும்.

யூஎஸ்பி டைப்-சி போர்ட்இ டூயல்-பேண்ட் வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், ப்ளூடூத் வி5 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ சாதனம். கிட்டத்தட்ட அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ள இந்த ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன். அதேபோல் இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் ரெட்மி நோட் 10எஸ், ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி, சாம்சங் எம்32 5ஜி, ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி, ரெட்மி 9ஏ உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சிறப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ஒரு சில சாதனங்கள் சலுகை விலையில் கிடைக்கிறது. குறிப்பாக பண்டிகை காலம் என்பதால் ஸ்மார்ட்போன், உள்ளிட்ட பல சாதனங்களை சலுகை விலையில் வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
realme narzo 50A Gets Price Cut in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X