செப்டம்பர் 20: 50எம்பி கேமராவுடன் களமிறங்கும் ரியல்மி நார்சோ 50 மாடல்கள்.!
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி நார்சோ 50 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை வரும் செப்டம்பர் 20-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனங்கள் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் வலையில் வெளிவரும். எனவே இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்கள்.

அதேபோல் சியோமி,சாம்சங், விவோ போன்ற நிறுவனம் அதிநவீன கேமரா அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில்
அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் ரியல்மி நிறுவனமும் அதிநவீன கேமரா அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களைபட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்மிட்டுள்ளது. அதேபோல் ரியல்மி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ள ரியல்மிநார்சோ 50 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ரியல்மி நார்சோ 50ஐ, ரியல்மி நார்சோ 50 ப்ரோ, ரியல்மி நார்சோ 50 என்ற பெயர்களில் புதிய ஸ்மார்ட்போன்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெளிவந்த தகவலின்படி, மீடியாடெக் ஹீலியோ ஜி85 ஆக்டோ-கோர் சிப்செட் மற்றும் ARM Mali G52 GPU
ஆதரவுடன் ரியல்மி நார்சோ 50 மாடல்கள் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 50எம்பி ரியர் கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டு ரியல்மி நார்சோ 50 மாடல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி C21Y
மேலும் சமீபத்தில் ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்த ரியல்மி C21Y ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம். ரியல்மி C21Y ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. . பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரியல்மி C21Y ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc T610 SoC சிப்செட் வசதி உள்ளது. மேலும் Realme UI சார்ந்தஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரியல்மி C21Y ஸ்மார்ட்போன். ரியல்மி C21Yஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ரியல்மி C21Y சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி monochrome சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி C21Y ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.0,ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட், 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி C21Y ஸ்மார்ட்போன். 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்டரியல்மி C21Y ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டரியல்மி C21Y மாடலின் விலை ரூ.9,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications