இன்று விற்பனைக்கு வரும் ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!
ரியல்மி நிறுவனத்தின் தரமான நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இன்று அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால், அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது இந்த சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி விலை
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.23,999-ஆக உள்ளது. குறிப்பாக ஹைப்பர் பிளாக் மற்றும் ஹைப்பர் ப்ளூ நிறங்களில்இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு கொண்டு இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.2000 கேஷ்பேக் சலுகை கிடைக்கும்.

சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும்
ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும். மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

மீடியாடெக் சிப்செட் வசதி
அதேபோல் ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 920 5ஜி சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். குறிப்பாக கேமிங் வசதிக்கு இந்த ஸ்மார்ட்போன் மிக அருமையாக பயன்படும். அதேபோல் Realme UI 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

மொத்தம் மூன்று கேமராக்கள்
ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா+ 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம்மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்தபுதிய ஸ்மார்ட்போன் மாடல்.

இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் Dolby Atmos உடன் இணைக்கப்பட்ட இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவு உள்ளன. இவை சிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும். பின்பு 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்.

இணைப்பு ஆதரவுகள்
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆதரவு போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். இந்த புதிய ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் சிப்செட், கேமரா வசதி, பேட்டரி என அனைத்தும் மிக அருமையாக உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications