Home
Mobile

50எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் தரமான சிப்செட், 50எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 50 மாடலின் விலை ரூ.15,499-ஆக உள்ளது. குறிப்பாக ஸ்பீட் பிளாக் மற்றும் ஸ்பீட் ப்ளூ நிறங்களில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு வரும் மார்ச் 3-ம் தேதி முதல் ஆன்லைனில் தளங்களில் இந்த புதிய சாதனம் விற்பனைக்கு வரும்.

ரியல்மி நார்சோ 50

ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ய ஸ்மார்போனில் கேமிங் வசதிக்கு

இந்த புதிய ஸ்மார்போனில் கேமிங் வசதிக்கு தகுந்தபடி மீடியாடெக் ஹீலியோ ஜி96 சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் Realme UI 2.0
சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்..

ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போனின் பின்புறம்

ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் கேமரா + 2எம்பி மேக்ரோகேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே16எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

நார்சோ 50 ஸ்மார்ட்போனில் 4ஜி

ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது மெமரி கார்டைபயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

நார்சோ 50 ஸ்மார்ட்போனில் 5000

ரியல்மி நார்சோ 50 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுஉள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்குஅதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.

4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல இணைப்புஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். பட்ஜெட் விலையில் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களுடன்வெளிவந்துள்ளது ரியல்மி நார்சோ 50

Best Mobiles in India

English summary
Realme Narzo 50 Launched in India: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X