பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் இரண்டு ரியல்மி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!
இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி நார்சோ 30ஏ மற்றும் ரியல்மி நார்சோ ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த சாதனங்களின் விலை மற்றும் பல்வேறு சிறப்பமங்களைப் பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 30ஏ விலை மற்றும் விற்பனை
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 30ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. பின்பு இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.9,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் வரும் மார்ச் 5-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் வலைத்தளங்களில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.

ரியல்மி நார்சோ 30ஏ அம்சங்கள்
டிஸ்பிளே 6.5-இன்ச் எச்டி பிளஸ் மினி-டிராப் டிஸ்பிளே (720 x 1600 பிக்சல்)
சிப்செட்: ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85
ரேம்: 3ஜிபி/4ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி
ரியர் கேமரா: 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி B&W Portrait லென்ஸ்
செல்பீ கேமரா: 5எம்பி
Realme UI சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
பேட்டரி: 6000 எம்ஏஎச்
18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி,
புளூடூத் 5, ஜிபிஎஸ்,
யூ.எஸ்.பி டைப்-சி
நிறம்: லேசர் பிளாக் மற்றும் லேசர் ப்ளூ

ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி விலை மற்றும் விற்பனை
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது,பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.19,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் மார்ச்4-ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் போன்ற வலைத்தளங்களில் விற்பனைக்கு வரும்.

ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி அம்சங்கள்
டிஸ்பிளே: 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே (2400 × 1080 பிக்சல்)
120Hz refresh rate
600 nits பிரைடநஸ் வசதி
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
சிப்செட்: மீடியாடெக் Dimensity 800U சிப்செட்
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி
Realme UI சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
பேட்டரி: 5000 எம்ஏஎச்
30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி,புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி
நிறம்: பிளேட் சில்வர் மற்றும் Sword பிளாக்


Click it and Unblock the Notifications