Home
Mobile

மே 18: அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் ரியல்மி நார்சோ 30.!

ரியல்மி நிறுவனம் வரும் மே 18-ம் தேதி மலேசியாவில் ரியல்மி நார்சோ 30 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்பின்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மே 18: அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் ரியல்மி நார்சோ 30.!

இந்த புதிய ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் ஆனது பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே, கிரேடியண்ட் அமைப்பில் வைக்கப்பட்டுள்ள செங்குத்தான பின்புற கேமரா மற்றும் சிறந்த மென்பொருள் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் வெளியான இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 18: அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் ரியல்மி நார்சோ 30.!

இந்த புதிய ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மீடியா டெக் ஹீலியோ ஜி 95 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன். இதுதவிர ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள்
மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி பி & டபிள்யூ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம்.

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

மே 18: அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் ரியல்மி நார்சோ 30.!

குறிப்பாக 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன்.

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஆண்டு பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Realme Narzo 30 with 48 Mega Pixel Camera Launching on May 18: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X