ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனுக்கு சத்தமில்லாமல் விலை உயர்வு.!
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனுக்கு சத்தமில்லாமல் ரூ.500 விலை உயர்த்தியுள்ளது. அதன்படி 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,499-ஆக இருந்தது, தற்போது ரூ.500 விலை உயர்ந்து
ரூ.13,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 30 மாடலின் முந்தைய விலை ரூ.14,499-ஆக இருந்தது, தற்போது ரூ.500 விலை ரூ.14,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் Racing Silver மற்றும் Racing Blueநிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 1080 x2400 பிக்சல்கள், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 90.5 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம், 405 பிபிஐ பிக்சல் அடர்த்தி மற்றும் 580 நிட்ஸ் பிரைட்நஸ் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த நார்சோ 30 சாதனம்.

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த நார்சோ 30 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் வசதி என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த நார்சோ 30ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் 3.5மிமீ ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 801.11, ப்ளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ் என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனம் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications