பிளிப்கார்ட் சொன்ன தகவல்: ரியல்மி நார்சோ 30 சீரிஸ் எப்படி இருக்கும்?
ரியல்மி நார்சோ 30 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தமாத இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகத்திற்கு முன்னதாக பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட்போன் குறித்த மைக்ரோசைட் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு பிறகு இந்த இகாமர்ஸ் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

ரியல்மி நார்சோ 30 சீரிஸ் வெளியீட்டு தேதி விரைவில் இருக்கும் என்பதை பிளிப்கார்ட் தளம் உறுதிப்படுத்துகிறது. மேலும் இதில் ரியல்மி நார்சோ 30 சீரிஸ் குறித்து எந்த விவரங்களையும் வெளியிடப்படவில்லை. ரியல்மி நார்சோ 30 தொடர் குறித்த விவரங்கள் பிப்ரவரி 18 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
ரியல்மி இந்தியா துணை தலைவர் மாதவ் ஷெத் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவலின்படி ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி தொலைபேசியாக இருக்கும் என தெரிவிக்கும் விதமாக ஸ்மார்ட்போன் பாக்ஸை வெளியிட்டிருந்தார்.
ரியல்மி நார்சோ 30, ரியல்மி நார்சோ 30 ப்ரோ மற்றும் ரியல்மி நார்சோ 30 ஏ ஸ்மார்ட்போன்கள் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதில் ரியல்மி நார்சோ 30 ப்ரோ மலிவு விலை 5ஜி சாதனமாக இருக்கும் என கூறப்படுகிறது.
ரியல்மி நார்சோ 30 மீடியாடெக் டைமன்சிட்டி 800யூ எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் எனவும் ஸ்மார்ட்போனில் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே இருக்கும் எனவும் ப்ளூ மற்றும் ஆஷ் என இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்த தொலைபேசி 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் என்று கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனில் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே மற்றும் செங்குத்தாக அடுக்கப்பட்ட பின்புற கேமராக்கள் இடம்பெறும். இது நீல மற்றும் சாம்பல் ஆகிய இரண்டு வண்ண வகைகளில் வரும்.
ஆண்ட்ராய்டு 11 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படும் எனவும் இதில் 4880 எம்ஏஎச் பேட்டரி, குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வரும் எனவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications