Just In
- 23 min ago
ரியல்மி 8 ப்ரோ சாதனம் இந்தியாவில் அறிமுகமா? என்னவெல்லாம் எதிர்ப்பார்களாம்?
- 40 min ago
3ஜிபி டேட்டா தினமும் வேண்டுமா? அப்போ இது தான் சரியான திட்டம்..
- 15 hrs ago
லுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்: விலை என்ன தெரியுமா?
- 16 hrs ago
ஆஃப்லைன் தளத்தில் விற்பனைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன்.!
Don't Miss
- News
அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் மரைக்காயர் மறைவு.. தலைவர்கள் இரங்கல்
- Automobiles
கார்களில் இனி ஏர்பேக்குகள் கட்டாயம்!! இந்த அம்சத்துடன் மலிவான விலையில் கிடைக்கும் கார்கள் இவைதான்!
- Movies
தல... தல தான்... துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற அஜித்... உற்சாகத்தில் ரசிகர்கள்
- Finance
பழைய காருக்கு குட் பை சொல்ல காத்திருங்க.. 5% தள்ளுபடியுடன் புதிய கார் வாங்கலாம்..!
- Sports
அனுபவமே இல்லாததன் விளைவுதான் இது.பின்னடைவை தந்த இங்கிலாந்தின் ரொட்டேஷன் பாலிசி.. கவாஸ்கர் அதிருப்தி
- Lifestyle
ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையான மிகவும் முக்கியமான 5 வைட்டமின்கள்!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஜனவரியில் அறிமுகமாகும் ரியல்மி நார்சோ 30 சீரிஸ்: வெளியான தகவல்கள் இதோ!
ரியல்மி நிறுவனத்தின் நார்சோ தொடர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதையடுத்து தற்போது ரியல்மி நார்சோ 30 சீரிஸை நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரியல்மி நார்சோ தொடர் ஸ்மார்ட்போன்கள்
ரியல்மி நிறுவனத்தின் பிரபலமான ஸ்மார்ட்போன்கள் தொடரில் நார்சோ சீரிஸ் ஒன்று. ரியல்மி நார்சோ 20 கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ரியல்மி நார்சோ தொடர் ஸ்மார்ட்போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து தற்போது நார்சோ தொடரில் அடுத்த ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது.

விரைவில் அறிமுகமாகும் ரியல்மி நார்சோ 30
ரியல்மி நார்சோ தொடரில் 30 சீரிஸ் விரைவில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் ஜனவரி 2021 இல் ரியல்மி நார்சோ 30 அறிமுகமாகும் என டிப்ஸ்டர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ தகவல் இல்லை
நார்சோ 30 தொடரில் இரண்டு ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என டிப்ஸ்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. வெளியான தகவலின்படி பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

விவரக்குறிப்புகள் வெளியாகவில்லை
ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் RMX3171 என்ற மாதிரி எண்ணுடன் இந்திய தரநிலை பணியகம் (BIS) சான்றிதழ் தெரிவிக்கிறது. இருப்பினும் இந்த சான்றிதழில் வேறு எந்த விவரக்குறிப்புகளும் வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

நார்சோ 30 மற்றும் நார்சோ 30 ஏ
முன்னதாக வெளியான ரியல்மி நார்சோ 20 சீரிஸில், நார்சோ 20, நார்சோ 20ஏ மற்றும் நார்சோ 20 ப்ரோ சாதனங்கள் வெளியானது. நார்சோ 30 சீரிஸில் நார்சோ 30 மற்றும் நார்சோ 30 ஏ ஸ்மார்ட்போன்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

4500 எம்ஏஎச் பேட்டரி
ரியல்மி நார்சோ 20, நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மீடியோ டெக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் நார்சோ 20ஏ மலிவு விலையில் கிடைக்கிறது இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த வேரியண்ட்கள் 4500 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

48 எம்பி பிரதான கேமரா
நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன் 48 எம்பி பிரதான கேமராவுடன், 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதத்துடனும் வருகிறது. நார்சோ 20 ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா அமைப்பு உள்ளது. அதேபோல் இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி இருக்கிறது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190