ஜனவரியில் அறிமுகமாகும் ரியல்மி நார்சோ 30 சீரிஸ்: வெளியான தகவல்கள் இதோ!

|

ரியல்மி நிறுவனத்தின் நார்சோ தொடர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதையடுத்து தற்போது ரியல்மி நார்சோ 30 சீரிஸை நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரியல்மி நார்சோ தொடர் ஸ்மார்ட்போன்கள்

ரியல்மி நார்சோ தொடர் ஸ்மார்ட்போன்கள்

ரியல்மி நிறுவனத்தின் பிரபலமான ஸ்மார்ட்போன்கள் தொடரில் நார்சோ சீரிஸ் ஒன்று. ரியல்மி நார்சோ 20 கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ரியல்மி நார்சோ தொடர் ஸ்மார்ட்போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து தற்போது நார்சோ தொடரில் அடுத்த ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது.

விரைவில் அறிமுகமாகும் ரியல்மி நார்சோ 30

விரைவில் அறிமுகமாகும் ரியல்மி நார்சோ 30

ரியல்மி நார்சோ தொடரில் 30 சீரிஸ் விரைவில் அறிமுகமாகும் என தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் ஜனவரி 2021 இல் ரியல்மி நார்சோ 30 அறிமுகமாகும் என டிப்ஸ்டர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ தகவல் இல்லை

அதிகாரப்பூர்வ தகவல் இல்லை

நார்சோ 30 தொடரில் இரண்டு ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என டிப்ஸ்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. வெளியான தகவலின்படி பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

(வீடியோ) தரையிறங்கும்போது வெடித்து சிதறிய பிரமாண்ட ஸ்டார்ஷிப் ராக்கெட்: (வீடியோ) தரையிறங்கும்போது வெடித்து சிதறிய பிரமாண்ட ஸ்டார்ஷிப் ராக்கெட்: "வெற்றிகரமான சோதனை" எலான் மஸ்க் டுவிட்

விவரக்குறிப்புகள் வெளியாகவில்லை

விவரக்குறிப்புகள் வெளியாகவில்லை

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் RMX3171 என்ற மாதிரி எண்ணுடன் இந்திய தரநிலை பணியகம் (BIS) சான்றிதழ் தெரிவிக்கிறது. இருப்பினும் இந்த சான்றிதழில் வேறு எந்த விவரக்குறிப்புகளும் வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

நார்சோ 30 மற்றும் நார்சோ 30 ஏ

நார்சோ 30 மற்றும் நார்சோ 30 ஏ

முன்னதாக வெளியான ரியல்மி நார்சோ 20 சீரிஸில், நார்சோ 20, நார்சோ 20ஏ மற்றும் நார்சோ 20 ப்ரோ சாதனங்கள் வெளியானது. நார்சோ 30 சீரிஸில் நார்சோ 30 மற்றும் நார்சோ 30 ஏ ஸ்மார்ட்போன்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

4500 எம்ஏஎச் பேட்டரி

4500 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி நார்சோ 20, நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மீடியோ டெக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் நார்சோ 20ஏ மலிவு விலையில் கிடைக்கிறது இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த வேரியண்ட்கள் 4500 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

48 எம்பி பிரதான கேமரா

48 எம்பி பிரதான கேமரா

நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன் 48 எம்பி பிரதான கேமராவுடன், 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதத்துடனும் வருகிறது. நார்சோ 20 ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா அமைப்பு உள்ளது. அதேபோல் இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Realme Narzo 30 Series May Launching on January 2021 in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X