Home
Mobile

ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.!

ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ரியல்மி UI 2.0 அப்டேட் கிடைக்கத் துவங்கியுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது. இப்போது ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைக்கத் துவங்கியுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.!

சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மிஷன், நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி, ப்ரியாரிட்டி சாட் பங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட். மேலும் இந்த ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி மாடலின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்..

ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.!

இந்த ரியல்மி நார்சோ 30 ப்ரோ மாடலில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 800U SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்க இந்த சாதனத்தை அருமையாக பயன்படுத்த முடியும். பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை
கொண்டு இந்த சாதனம் வெளிவந்தது, தற்போது ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ரியல்மி நார்சோ 30 ப்ரோ சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளன, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.!

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சிஇணைப்பு ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது ரியல்மி நார்சோ 30 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில்
வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Realme Narzo 30 Pro Received Android 11-Based Realme UI 2.0: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X