8ஜிபி ரேம், குறைந்தவிலை 5ஜி ஸ்மார்ட்போன்: இன்று விற்பனைக்கு வரும் ரியல்மி நார்சோ 30 ப்ரோ!
ரியல்மி நிறுவனத்தின் சமீபத்திய சாதனமான ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 30ஏ ஆகிய ஸ்மார்ட்போன்கள் கடந்தமாதம் அறிமுகம் செய்யப்பட்டது. நார்சோ 30 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. ரியல்மி.காம் மற்றும் பிளிப்கார்ட் மூலமாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

இரண்டு வேரியண்ட்களில் இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது இந்த ஸ்மார்ட்போன். இந்தியாவில் மிகவும் மலிவான 5ஜி ஸ்மார்ட்போனில் ஒன்றாக இது இருக்கிறது. ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி சாதனம் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 6ஜிபி ரேம், 64ஜிபி சேமிப்பு கொண்ட மாடலின் விலை ரூ.16,999 எனவும் 8 ஜிபி ரேம், 128ஜிபி சேமிப்பு கொண்ட மாடலின் விலை ரூ.19,999 எனவும் இருக்கிறது.

இன்று பிற்பகல் 12 மணிக்கு இந்த ஸ்மார்ட்போனஅ பிளிப்கார்ட் மூலமாக விற்பனைக்கு வருகிறது. ஐசிஐசிஐ வங்கி கார்ட் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி அம்சங்கள் குறித்து பார்க்கையில் 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்ப வீதம் ஆகியவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பஞ்ச் ஹோல் வடிவமைப்போடு வருகிறது. எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் ஆக்டோ கோர் மீடியாடெக் 800 யூஎஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறு. இரட்டை நானோ சிம்கார்டு ஸ்லாட் இதில் இருக்கிறது. ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு இந்த ஸ்மார்ட்போன் வருகிறது.

ரியல்மி மூன்று பின்புற கேமராக்களுடன் வருகிறது. 48 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 2 எம்பி மூன்றாம் நிலை கேமராக்கள் இருக்கிறது. முன்பக்கத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 128 ஜிபி வரை மெமரி விரிவாக்க வசதி இருக்கிறது. இதில் மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி 30 வாட்ஸ் டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு ஆகியவை உள்ளது. சாதனத்தின் பக்கவாட்டில் பாதுகாப்பு அம்சத்திற்காக கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.

ரியல்மி நார்சோ 30 ப்ரோ இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில், 4ஜி எல்டிஇ, யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகியவை இருக்கிறது. இந்தியாவில் கிடைக்கும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனில் இது ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications