Home
Mobile

நாளை விற்பனை: ஆரம்பமே சலுகையோடு ரியல்மி நார்சோ 30 5ஜி- சிறந்த மலிவு விலை 5ஜி சாதனம்!

ரியல்மி இந்தியாவில் கடந்தவாரம் நார்சோ 30-ஐ அறிவித்தது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜி மற்றும் 5ஜி வகைகளில் வருகிறது. 4ஜி மாடல் இன்று ஜூன் 29 விற்பனைக்கு வந்துள்ளது. 5ஜி மாடல் நாளை விற்பனைக்கு வர உள்ளது. ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனின் முதல்விற்பனை ஜூன் 30 அன்று பிளிப்கார்ட் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் மதியம் 12 மணிமுதல் விற்பனைக்கு வருகிறது. அதேபோல் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரியல்மி நார்சோ 30 5ஜி

ரியல்மி நார்சோ 30 5ஜி

ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனானது குறிப்பிட்ட சலுகையுடன் நாளை விற்பனை வர உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,999 ஆக உள்ளது.

6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே வடிவமைப்பு வசதியோடு வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 1080 x 2400 பிக்சல் தீர்மானத்தை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வசதியோடு வருகிறது. மேலும் இது 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி சிப்செட் வசதி

மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி சிப்செட் வசதி

புதிய நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி சிப்செட் வசதியோடு இடம்பெற்றுள்ளது. இந்த சிப்செட் வசதி இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ரியல்மி யூஐ 2.0 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரேசிங் ப்ளூ மற்றும் ரேசிங் சில்வர் நிறங்களில் வருகிறது.

48 எம்பி பிரைமரி சென்சார் கேமரா

48 எம்பி பிரைமரி சென்சார் கேமரா

ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 48 எம்பி பிரைமரி சென்சார் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் போர்ட்ரெய்ட் லென்ஸ் என டிரிபிள் கேமரா வசதியோடு வருகிறது. மேலும் வீடியோ கால் வசதிக்கு முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியை கொண்டுள்ளது. மேலும் இதில் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளோடு வருகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வருகிறது. மேலும் பாதுகாப்பு அம்சத்திற்கு கைரேகை சென்சார் உள்ளது. இணைப்பு ஆதரவுகளை பொருத்தவரையில் 5ஜி, 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 5, யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆதரவோடு வருகிறது.

Best Mobiles in India

English summary
Realme Narzo 30 5G Smartphone Going to Sale on Tomorrow (June 30): Price, offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X