Home
Mobile

ரியல்மி நார்சோ 30 5ஜி, ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்.!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி நார்சோ 30 5ஜி, ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன்கள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ரியல்மி நார்சோ 30 5ஜி சாதனம் ஆனது குறிப்பிட்ட சலுகையுடன் ஜூன் 30-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஜூன் 29-ம் தேதி ரியல்மி நார்சோ 30 விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 30 5ஜி மாடலின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 30 மாடல் ரூ.12,499-விலையிலும், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 30 மாடல் ரூ.14,999-விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்

ரியல்மி நார்சோ 30 5ஜி

ரியல்மி நார்சோ 30 5ஜி

ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு1080 x 2400 பிக்சல் தீர்மானம், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்புவசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த புதிய நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த realme UI 2.0 இயங்குதளத்தை அடிப்படையாககொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் ரேசிங் ப்ளூ மற்றும் ரேசிங் சில்வர் நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனின்

ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் +2எம்பி monochrome portrait lens என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால்
அழைப்புகளுக்கு என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளைகொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

ல் 5000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் கைரேகை சென்சார் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

5g, 4G LTE, புளூடூத் 5, வைஃபை 802.11, ஜி.பி.எஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி நார்சோ 30

ரியல்மி நார்சோ 30

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 580 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த புதிய ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த realme UI 2.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது இந்த புதிய ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போ

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி B&W portrait கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் மாடல்.

000 எம்ஏஎச்

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் கைரேகை சென்சார் வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Realme Narzo 30 5G, Realme Narzo 30 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X