ஜூன் 24 உறுதி: ஒன்னு இல்ல மூன்று சாதனங்கள்- பக்கா ரியல்மி ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்டிவி!

|

ரியல்மி நார்சோ 30 4ஜி, நார்சோ 30 5ஜி மற்றும் ரியல்மி 32 இன் முழு எச்டி டிவியை ரியல்மி நிறுவனம் ஜூன் 24 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிதாக அறிமுகமாக உள்ள ரியல்மி ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்டிவிகள் குறித்து பார்க்கலாம்.

ரியல்மி நார்சோ 30 4ஜி

ரியல்மி நார்சோ 30 4ஜி

ரியல்மி நார்சோ 30 4ஜி கடந்தமாதம் மலேசியாவில் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு ரியல்மி நார்சோ 30 5ஜி சில நாட்களுக்கு பின் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ரியல்மி நிறுவனம் நார்சோ 30 4ஜி, நார்சோ 30 5ஜி மற்றும் ரியல்மி 32 இன்ச் முழு எச்டி டிவயை நிறுவனம் ஜூன் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த அறிமுக நேரலை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூப்பில் ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு

ரியல்மி நார்சோ 30 விவரக்குறிப்புகள் குறிப்புகள் குறித்து பார்க்கையில், ரியல்மி நார்சோ 30 சாதனமானது 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 580 நைட்ஸ் பிரகாச உச்சநிலையை கொண்டிருக்கிறது. மேலும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் இந்த சாதனம் வருகிறது. இதன் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 2 மெகாபிக்சல் பிளாக் அண்ட் வைட் போர்ட்ரெய்ட் கேமரா, 4 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் கேமரா உட்பட 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இதில் இருக்கிறது.

16 மெகாபிக்சல் முன்புற செல்பி கேமரா

16 மெகாபிக்சல் முன்புற செல்பி கேமரா

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் முன்புற செல்பி கேமரா இருக்கிறது. ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 ரியல்மி யுஐ 2.0 உடன் வருகிறது. அதோடு இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு 30 வாட்ஸ் டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறது. இதன் சார்ஜிங் அம்சம் குறித்து பார்க்கையில், இதை 25 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்யலாம், அதேபோல் 65 நிமிடங்களில் 100% வரை சார்ஜ் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.

கைரேகை ஸ்கேனர் வசதி

கைரேகை ஸ்கேனர் வசதி

பாதுகாப்பு அம்சத்திற்கு ஒரு பக்க கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. அதோடு இதில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மூலம் ஜோடியாக இணைக்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 எஸ்ஓசி மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

ரியல்மி நார்சோ 30 5ஜி விவரக்குறிப்புகள்

ரியல்மி நார்சோ 30 5ஜி விவரக்குறிப்புகள்

ரியல்மி நார்சோ 30 5ஜி விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், ரியல்மி நிறுவனம் நார்சோ 30 5ஜி சாதனத்தில் 6.5 இன்ச் முழு எச்டி ப்ளஸ் 1,080 × 2,400 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. அதேபோல் டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் ஸ்க்ரீன் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. மேலும் 90.5 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி விகிதத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் கேமரா, 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

16 மெகாபிக்சல் முன்புற கேமரா

16 மெகாபிக்சல் முன்புற கேமரா

இந்த ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ வசதிக்கென 16 மெகாபிக்சல் முன்புற கேமரா பொருத்தப்ட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி யுஐ2.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பகத்துடன் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் இருக்கிறது.

ரியல்மி 32 இன்ச் டிவி

ரியல்மி 32 இன்ச் டிவி

முன்னதாக ரியல்மி தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத்., ரியல்மி 32 இன்ச் டிவியை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக டீஸ் செய்திருந்தார். க்ரோமோ பூஸ்ட் கலர் எஞ்சின் ஆதரவு, 400 நிட்ஸ் பிரகாசம் மற்றும் 24 வாட்ஸ் குவார் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme Narzo 30 4G, Realme Narzo 30 5G Set to Launch on June 24: Expected Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X