இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் பயனரா நீங்கள்: உங்களுக்கு ஒரு நற்செய்தி!
ரியல்மி நார்சோ 20ஏ ஸ்மார்ட்போனானது கடந்தாண்டு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தோடு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 11 அப்டேட் உடன் வந்திருக்கிறது. ரியல்மி நார்சோ 20ஏ ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யூஐ 2.0 புதுப்பிப்பை பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான அப்டேட்
ரியல்மி நார்சோ 20ஏ ஆனது ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பை பெற்றுள்ளது. கடந்தாண்டு இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 உடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனானது பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. ரியல்மி நார்சோ 20ஏ ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யூஐ 2.0 அப்டேட்டின் நிலையான புதுப்பிப்பை பெற்றுள்ளது. இந்த பிராண்ட் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் ஆண்ட்ராய்டு 10 உடன் அறிமுகம் செய்யப்பட்டது.

செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் சிக்கல்கள்
ரியல்மி நார்சோ 20ஏ ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 மூலம் அறிவிக்கப்பட்ட புதிய உருவாக்கம் இது RMX2050EX_11.A.05 பதிப்புடன் வருகிறது.
புதுப்பிப்பு ஒரே கட்டமாக வெளியிடப்படும் எனவும் இந்த புதுப்பிப்பு ஆரம்பத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கு தோராயமாக வெளியிடப்படும் எனவும் இதில் சிக்கல்கள் பிழைகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை உறுதி செய்த பிறகு அடுத்த சில நாட்களில் அனைவருக்கும் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த புதுப்பிப்பானது செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் சிக்கல்களை மேம்படுத்துகிறது.

அப்டேட் செய்வதற்கான வழிமுறைகள்
பயனர்கள் தங்கள் சாதனம் புதுப்பிப்பை பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்க செட்டிங்க்ஸ் அமைப்புக்குள் சென்று மென்பொருள் புதுப்பிப்பு பயன்பாட்டை கிளிக் செய்து பார்க்கலாம். புதுப்பித்தல் அணுகல் இருந்தால் இந்த பாதுகாப்பு புதுப்பிப்பு இணைப்பை அப்டேட் செய்து கொள்ளலாம்.

டார்க் மோட், புதிய ஆப் டிராக்கர், சிஸ்டம் க்ளோனர்
ரியல்மி நார்சோ 30 ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யூஐ 2.0 புதிய அம்சங்கலை கொண்டு வருகிறது. இந்த அம்சம் புதிய மேம்படுத்தப்பட்ட டார்க் மோட், புதிய ஆப் டிராக்கர், சிஸ்டம் க்ளோனர், மூன்றாம் தரப்பு ஐகான் ஆதரவு, மேம்படுத்தப்பட்ட கேம் ஸ்பேஸ் உள்ளிட்டவைகளை கொண்டுள்ளது. நார்சோ 20 சீரிஸ் தொடரில் நார்சோ 20, நார்சோ 20 ஏ மற்றும் நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றது.

6.5-இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே
ரியல்மி நார்சோ 20ஏ ஸ்மார்ட்போனானது 720 x 1600 பிக்சல் தீர்மானத்துடன் வருகிறது. இது 89.8% ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன் 6.5-இன்ச் HD+ LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 10 வாட்ஸ் நிலையான ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கிறது.

12 மெகாபிக்சல் முதன்மை கேமரா
இந்த ஸ்மார்ட்போனானது 12 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் பிளாக் அண்ட் வைட் கேமரா, 2 மெகாபிக்சல் ரெட்ரோ லென்ஸ் என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்பி வசதிக்கென இந்த ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் ஸ்னாப்பர் வசதி இருக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. அதேபோல் நார்சோ 20ஏ ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. ரியல்மி நார்சோ 20ஏ ஸ்மார்ட்போனானது க்ளோரி சில்வர் வண்ண விருப்பத்தில், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு அமேசான் தளத்தில் கிடைக்கிறது.

18 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு
6.5 அங்குல எச்டி+ டிஸ்ப்ளே
மீடியாடெக் ஹீலியோ ஜி 85 SoC ஆதரவு
4 ஜிபி ரேம்+ 128 ஜிபி சேமிப்பு வசதி
48 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல், 2 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா 8 மெகாபிக்சல் செல்பி கேமரா
6000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு


Click it and Unblock the Notifications