ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா?
ரியல்மி நிறுவனத்தின் நார்சோ 20 ஸ்மார்ட்போன் மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்த சாதனம் தனித்துவமான அம்சங்களை கொண்டு வெளிவந்ததால் அதிகளவு விற்பனை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரியல்மி யுஐ 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். குறிப்பாக இந்த புதிய அப்டேட் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, குவிக் ரிட்டன் பபிள், புதிய ஆப் டிராயர், டார்க் மோட், மேம்பட்ட நோட்டிபிகேஷன் பேனல்
என பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.

ரியல்மி நிறுவனம் தெரிவித்த தகவலின்படி, இந்த புதிய அப்டேட் படிப்படியாக வழங்கப்படுகிறது. எனவே அனைத்து ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போன்பயனர்களுக்கும் கிடைக்க சில நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த அப்டேட் பயனர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான்கூறவேண்டும். மேலும் இப்போது ரியல்மி நார்சோ 20, ரியல்மி நார்சோ 20 ப்ரோ, ரியல்மி நார்சோ 20ஏ சாதனங்களின் சிறப்பம்சங்களைப்பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 20
6.5 அங்குல எச்டி+ டிஸ்ப்ளே
மீடியாடெக் ஹீலியோ ஜி 85 SoC ஆதரவு
4 ஜிபி ரேம்+ 128 ஜிபி சேமிப்பு வசதி
48 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல், 2 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா
8 மெகாபிக்சல் செல்பி கேமரா
6000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு

ரியல்மி நர்சோ 20 ப்ரோ
6.5 அங்குல எஃப்.எச்.டி + டிஸ்ப்ளே,
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 95 சிப்செட்
48 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் பிளாக் அன்ட் வொயிட் புகைப்பட லென்ஸ் உள்ளது
16 மெகாபிக்சல் செல்பி கேமரா
4500 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

ரியல்மி நார்சோ 20 ஏ
6.5 அங்குல எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட்
4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு
12 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் சென்சார், 2 மெகாபிக்சல் ரெட்ரோ லென்ஸ் ஆகியவையுடன் உள்ளது.
8 மெகாபிக்சல் செல்பி கேமரா, பின்புற கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 10 ஆதரவு, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
அடடா., கூகுள் டாக்ஸ், ஷீட்ஸ், ஸ்லைடிலும் இந்த அம்சம் இருக்கா?- இதை மட்டும் செய்தால் போதும்!


Click it and Unblock the Notifications