ரியல்மி நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி தள்ளுபடி: நவம்பர் 4 வரை மட்டுமே!
6.5 அங்குல முழு எச்டி+ (1080 x 2,400 பிக்சல்கள்), 48 மெகாபிக்சல் கேமரா, 4500 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட ரியல்மி 20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட்டில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை
பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் பல ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் ஒருபகுதியாக ரியல்மி நார்சோ 20 ப்ரோ மாடலுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி ரூ.14,999 எனவும் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.16,999 என்ற விலையுடனும் விற்பனைக்கு கிடைத்தது.

6ஜிபி ரேம், 8 ஜிபி ரேம் வேரியண்ட்
தற்போது விலைக்குறைப்புக்கு பிறகு இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மாடல் ரூ.13,999 எனவும் 8 ஜிபி ரேம் மாடல் ரூ.15,999 எனவும் விற்பனைக்கு கிடைக்கிறது. அதோடு ரூ.2500 முதல் வட்டியில்லா இஎம்ஐ விருப்பத்திலும் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட்டில் கேஷ்பேக் போன்ற கூடுதல் சலுகையும் கிடைக்கப்படுகிறது.

நவம்பர் 4 ஆம் தேதி வரை மட்டுமே
ஆக்சிஸ் வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி, பிளிப்கார்டில் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தி 5 சதவீதம் கேஷ்பேக், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களாக ரூ.5000 உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகை விற்பனை நவம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

ரியல்மி நார்சோ 20 ப்ரோ: அம்சங்கள்
6.5 அங்குல முழு எச்டி+ (1080 x 2,400 பிக்சல்கள்), 20: 9 விகிதத்துடன் கூடிய அதி மென்மையான காட்சியை இந்த சாதனம் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனானது கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்போடு வருகிறது. இந்த சாதனம் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 95 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

ரியல்மி நார்சோ 20 ப்ரோ
- 6.5 அங்குல எஃப்.எச்.டி + டிஸ்ப்ளே
- ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 95 சிப்செட்
- 48 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் பிளாக் அன்ட் வொயிட் புகைப்பட லென்ஸ் உள்ளது
- 16 மெகாபிக்சல் செல்பி கேமரா
- 4500 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 10 ஆதரவு


Click it and Unblock the Notifications