Home
Mobile

இப்படி ஒரு போனுக்கு தான் வெயிட்டிங்.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரிக்கு மேல.. புது Realme 5G போன்.. எந்த மாடல்?

ரியல்மி (Realme) நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் மாடலான ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி (Realme NARZO 100x 5G) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. பட்ஜெட்டில் பெரிய பேட்டரி கொண்ட மாடலாக களமிறங்க இருப்பதால், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் வைத்துள்ளது.

இந்திய மார்கெட்டில் நார்சோ சீரிஸ் (NARZO Series) மாடல்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. பட்ஜெட்டில் கேமிங் பிரியர்கள் விரும்பும்படியான டிசைன் மற்றும் பேட்டரி கேபாசிட்டி கிடைக்கும். முன்னதாக வெளியான ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி (Realme NARZO 90x 5G) ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரி கிடைத்தது.

இப்படி ஒரு போனுக்கு தான் வெயிட்டிங்.. 7000mAh பேட்டரிக்கு மேல!

இப்போது, இதைவிட அதிக கேபாசிட்டியுடன் ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ரியல்மி இந்தியா தளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் போஸ்டரில் நான் ஸ்டார் பவர் (Non-Stop Power) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, பெரிய பேட்டரி கொண்ட மாடலாக இருக்க போகிறது.

டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்க இருக்கிறது. இந்த ரியர் கேமராவுக்கு நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைத்ததை போலவே பல்ஸ் லைட் (Pulse Light) கிடைக்க இருக்கிறது. இந்த விவரங்களை மட்டுமே அதிகாரப்பூர்வ போஸ்டர் குறிப்பிடுகிறது. ஓரிரு வாரங்களில் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது.

பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கலாம். இந்த ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ள முன்னதாக வெளியான ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைத்த பீச்சர்களை பார்க்க வேண்டும். ஏனென்றால், இதில் இருந்து அப்கிரேட் செய்யப்பட்டு கிடைக்கும்.

ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme NARZO 90x 5G Specifications): தரமான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை இந்த ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி பேக் செய்துள்ளது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிடைக்கிறது.

6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. டிடி-ஸ்டார் டிபிளஸ் (DT-Star D+) கிளாஸ் புரொடெக்சன் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ரியல்மி யுஐ 6.0 (realme UI 6.0) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) எதிர்பார்க்கலாம். 50 எம்பி மெயின் கேமராவுக்கு சோனி ஐஎம்எக்ஸ்852 (Sony IMX852) சென்சார் கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.

இதேபோல கேமரா சிஸ்டம் ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் கிடைக்கும். 7000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 60W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இதைவிட அதிக கேபாசிட்டியை நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கலாம். MIL-STD 810H மிலிட்டரி கிரேடு சர்டிபிகேஷன், IP65 ரேட்டிங் கிடைக்கிறது.

இதில் எந்த மாற்றும் இருக்காது. ரியல்மி நார்சோ 90எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் இருந்தது. ஆகவே, ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விலை ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் இருக்கும். இதைவிட மலிவாகவும் கிடைக்க வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் அதிகாரப்பூர்வ பீச்சர்களை பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Realme NARZO 100x 5G With Dual Camera Non Stop Power Launching India Soon Expected Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X