ஜூலை 15-க்கு அப்புறம் இதுதான்.. பட்ஜெட்ல 8000mAh பேட்டரி.. BYBASS சார்ஜிங்.. 144Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி (Realme NARZO 100x 5G) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட்டில் 8000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் கொண்ட மாடலாக வெளியாக இருக்கிறது.
வருகிற ஜூலை 15 ஆம் தேதியன்று இந்த ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஆகவே, அமேசான் மற்றும் ரியல்மி இந்தியா தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் முக்கிய பீச்சர்களும் உறுதியாகி இருக்கின்றன.

டிசைனை பொறுத்தவரை ஏஐ பல்ஸ் லைட் (AI Pluse Light) கிடைக்க இருக்கிறது. இதில் 9 கலர் ஆப்ஷன்கள் மற்றும் 5 ஸ்பீடு ஆப்ஷன் கிடைக்கின்றன. ரியர் கேமராவில் இந்த பல்ஸ் லைட் கிடைப்பதால், நைட் போட்டோகிராபிக்கு ஏற்ப இருக்கிறது. அதேபோல நோட்டிபிகேஷன்களுக்கு ஏற்ப ஆப்ஷன்களை மாற்றி கொள்ளலாம்.
ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme NARZO 100x 5G Specifications): 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 8000mAh பேட்டரியை இந்த ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. இந்த பேட்டரியை ஃபுல் சார்ஜ் செய்தால் 3 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். 8.8 எம்எம் ஸ்லிம் பாடி கொண்ட மாடலாக வெளியாக இருக்கிறது.
கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இருப்பதால், 12 மணி நேரங்களுக்கு பிஜிஎம்ஐ பிளேபேக் கொடுக்கும். 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், பைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) கொடுக்க இருக்கிறது. இதுபோக ஏஐ நைட் சார்ஜிங் மோட் (AI Night Charging Mode) மற்றும் ஏஐ கோல்டு மோட் (AI Cold Mode) கிடைக்கிறது. மேலும், சார்ஜிங் பூஸ்ட் (Charging Boost) கிடைக்கிறது.
இதுபோக ஒன் டேப் கூலிங் (One Tap Cooling) மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, ஒட்டுமொத்தமாக பேட்டரியில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. ஆகவே, பெரிய பேட்டரி மட்டுமல்லாமல், அதற்கு ஏற்ப சேப்டி பீச்சர்களையும் இந்த ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.
144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளேவுடன் இந்த ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. பஞ்ச்-ஹோல் டிஸ்பிளேவை கொடுக்க இருக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimesity 6300 6nm) சிப்செட்டை கொடுக்கிறது.
60FPS கேமிங் சப்போர்ட் கொடுக்க இருக்கிறது. 5300எம்எம் ஏர்ப்ளோவ் வேப்பர் சேம்பர் கூலிங் (Aiflow Vapor Chamber Cooling) கிடைக்கிறது. 14 ஜிபி வரையில் டைனாமிக் ரேம் (Dynamic RAM) கிடைக்கிறது. 256 ஜிபி ரேம் கொண்ட மாடலாக வெளியாக இருக்கிறது. 4 வருடங்களுக்கு ஸ்மூத் பர்ஃபாமென்ஸ் கொடுக்கிறது. மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்கிறது.
ஆகவே, ஏர்பேக் புரொடெக்சன், டஃப் கார்னர் புரொடெக்சன், டிராப் புரொடெக்சன் கிடைக்கிறது. 50 எம்பி டூயல் ஏஐ கேமரா வருகிறது. மிட்நைட் பிளாக் மற்றும் ஃபிளாஷ் ஆரஞ்ச் கலர்களில் கிடைக்க இருக்கிறது. ரியல்மி யுஐ 7.0 கிடைக்கிறது. இந்த பீச்சர்களுடன் ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications