Home
Mobile

Realme-யின் புது ராக்கெட்.. 8000mAh பேட்டரி, பைபாஸ் சார்ஜிங், 14GB ரேம், IP65 உடன் புது 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி (Realme) நிறுவனம், வருகிற ஜூலை 15 ஆம் தேதி அன்று இந்திய சந்தையில் ஒரு புதிய பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அது ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி (Realme Narzo 100x 5G) மாடல் ஆகும்.

அறிமுகத்திற்கு முன்னதாகவே, அமேசான் இந்தியா (Amazon India) மற்றும் ரியல்மி இந்தியா (Realme India) இணையதளங்களில் உள்ள விளம்பர பக்கங்கள், இந்த ஸ்மார்ட்போனின் ஹாட்வேர் (hardware) மற்றும் சாஃப்ட்வேர் (software) அம்சங்களை விரிவாக விளக்கியுள்ளன. இதில் பேட்டரி திறன், உறுதியான கட்டமைப்பு மற்றும் ஏஐ வசதிகள் ஆகியவைகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.

Realme-யின் புது ராக்கெட்.. 8000mAh பேட்டரி, பைபாஸ் சார்ஜிங்!

ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி முக்கிய சிறப்பம்சங்கள்: ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி மாடலில் மிகப்பெரிய 8000mAh பேட்டரி இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது சாதாரண பயன்பாட்டில் (typical use) மூன்று நாட்கள் வரை நீடிக்கும் என்று ரியல்மி கூறுகிறது.

அதிக திறன் கொண்ட பேட்டரி இருந்தபோதிலும், இந்த போன் 8.8 மிமீ தடிமனுடன் ஸ்லிம் ஆன டிசைனையே கொண்டுள்ளது மற்றும் 45W பாஸ்ட் சார்ஜிங் வசதியை ஆதரிக்கிறது. மேலும், கேமிங்கின் போது போன் சூடாவதை தவிர்க்க 'பைபாஸ் சார்ஜிங்' (bypass charging) வசதியும், பிற டிவைஸ்களை சார்ஜ் செய்ய 'ரிவர்ஸ் சார்ஜிங்' (reverse charging) வசதியும் இதில் உள்ளன.

டிஸ்பிளேவை பொறுத்தவரை ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் (refresh rate) மற்றும் 1,200 நிட்ஸ் (nits) பீக் ப்ரைட்னஸ் கொண்ட 6.67-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 5ஜி இணைப்பு வசதி கொண்ட 6nm MediaTek Dimensity 6300 ப்ராசஸர் (processor) மூலம் இயங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 256GB வரை ஸ்டோரேஜ் வசதியையும், 14GB வரை டைனமிக் ரேம் (dynamic RAM) வசதியையும் வழங்குகிறது; இந்த டைனமிக் ரேம் தொழில்நுட்பம் ஸ்டோரேஜில் ஒரு பகுதியை 'விர்ச்சுவல் மெமரி'யாக (virtual memory) பயன்படுத்துகிறது. மேலும் அதிக பயன்பாட்டின் போது ஏற்படும் வெப்பத்தை கட்டுப்படுத்த, மென்பொருள் சார்ந்த குளிர்விப்பு மேம்பாடுகளுடன் 5,300mm² அளவுள்ள 'வேப்பர் சேம்பர்' (vapor chamber) குளிர்விப்பு அமைப்பும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை இதன் ரியர் கேமரா செட்டப் ஆனது 50எம்பி ப்ரைமரி சென்சாரை அடிப்படையாக கொண்டது. மென்பொருளை பொறுத்தவரை, இது Realme UI 7.0 கொண்டு இயங்குகிறது மற்றும் பல கூகுள் ஜெமினி (Google Gemini) அம்சங்களை நேரடியாக இயக்க முறைமையிலேயே (OS) ஒருங்கிணைத்துள்ளது. இதில் ஜெமினி லைவ் (Gemini Live) அம்சமும் அடங்கும்

மேலும், 'Object Eraser' (தேவையற்ற பொருட்களை நீக்குதல்) மற்றும் 'Portrait Lighting' (போர்ட்ரெய்ட் லைட்டிங்) மாற்றங்கள் போன்ற சொந்த புகைப்பட எடிட்டிங் டூல்களையும் ரியல்மி இதில் சேர்த்துள்ளது. இதன் ரியர் பேனல் வெளிப்படையான (transparent-style) தோற்றத்தையும், 'Pulse Light' எனப்படும் LED நோட்டிபிகேஷன் அமைப்பையும் கொண்டுள்ளது. இது உள்வரும் அழைப்புகள், பேட்டரி நிலை ஆகியவற்றை தெரிவிக்கவோ அல்லது Spotify போன்ற ஆப்களில் ஒலிக்கும் இசைக்கு ஏற்ப ஒத்திசைக்கவோ (sync) இந்த லைட்டை ஒன்பது நிறங்கள் மற்றும் ஐந்து வேகங்களில்கஸ்டமைஸ் செய்யலாம்

நீடித்து உழைக்கும் தன்மையைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 மதிப்பீட்டையும், MIL-STD-810H சான்றிதழையும் பெற்றுள்ளது; அதாவது, 1.8 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்தாலும் இது சேதமடையாமல் தாங்கும் திறன் கொண்டது.

என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இந்த ஸ்மார்ட்போன் 'மிட்நைட் பிளாக்' (Midnight Black) மற்றும் 'ஃபிளாஷ் ஆரஞ்சு' (Flash Orange) ஆகிய நிறங்களில் வருகிறது. அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, இது ரியல்மியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அமேசான் இந்தியா வழியாக வாங்க கிடைக்கும். இது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் (ரூ.17,999) அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme Narzo 100x 5G with 8000mAh Battery 14GB Virtual RAM IP65 India Launch on July 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X