Home
Mobile

இதுக்கு தான் இந்தியாவே வெயிட்டிங்.. நாளை சலுகையுடன் விற்பனைக்கு வரும் புது ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

சமீபத்தில் இந்தியாவில் ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி (Realme Narzo 100x 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த புதிய ரியல்மி போன் நாளை முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது. அதாவது நாளை (ஜூலை 22) மதியம் 12 மணி அளவில் ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி போனை அமேசான் தளத்தில் வாங்க முடியும். இப்போது இந்த போனின் விலை, அம்சங்கள் மற்றும் சலுகைகளைப் பார்க்கலாம்.

ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி விலை
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி மாடலின் விலை ரூ.20,999-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி மாடலின் விலை ரூ.22,999-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி மாடலின் விலை ரூ.24,999-ஆக உள்ளது.

நாளை சலுகையுடன் விற்பனைக்கு வரும் புது ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

இந்த போனின் அறிமுக சலுகையாக ரூ.500 கூப்பன் தள்ளுபடி மற்றும் வங்கிச் சலுகைகளைப் பயன்படுத்தி ரூ.2000 தள்ளுபடியையும் பெறமுடியும். எனவே இந்த போனை ரூ.18,499 விலையில் வாங்கிவிட முடியும்.

ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme NARZO 100x 5G Specifications): 6.8-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1200 நிட்ஸ் பிரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 180ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300(MediaTek Dimensity 6300 chipset) உடன் ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளது.

அதேபோல் 50எம்பி ரியர் கேமரா உடன் புதிய ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 8எம்பி கேமரா வசதியும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதுவும் 1115 அல்ட்ரா லீனியர் பாட்டம் போர்ட்டட் ஸ்பீக்கர் (ultra linear bottom-ported speaker), 400% ஆட்டோ வால்யூம் ஆடியோ, யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio)போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த ரியல்மி போனில் உள்ளன.

குறிப்பாக 6ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ சுற்றளவில் வசிப்பவர்களுக்கு இப்படியொரு வசதியா? இனி இந்த செயலி போதும்.. இதோ விவரம்!சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ சுற்றளவில் வசிப்பவர்களுக்கு இப்படியொரு வசதியா? இனி இந்த செயலி போதும்.. இதோ விவரம்!

இந்த புதிய ரியல்மி போன் IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி போன் வெளியாக உள்ளது.

நாளை சலுகையுடன் விற்பனைக்கு வரும் புது ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

8000எம்ஏஎச் பேட்டரி உடன் ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மிட்நைட் பிளாக் மற்றும் ஃபிளாஷ் ஆரஞ்சு நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Realme Narzo 100x 5G will go on sale for first time tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X