ஆரம்பமே ஆஃபர்.. அறிமுகமானது புதிய ரியல்மி 5ஜி போன்.. 8000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?
ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி (Realme Narzo 100x 5G) ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், 50எம்பி கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளியாகி உள்ளது. இப்போது ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme NARZO 100x 5G Specifications): குறிப்பாக 6.8-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1200 நிட்ஸ் பிரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 180ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300(MediaTek Dimensity 6300 chipset) உடன் ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் உள்ளது.
50எம்பி ரியர் கேமரா உடன் புதிய ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 8எம்பி கேமரா வசதியும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
1115 அல்ட்ரா லீனியர் பாட்டம் போர்ட்டட் ஸ்பீக்கர் (ultra linear bottom-ported speaker), 400% ஆட்டோ வால்யூம் ஆடியோ, யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio)போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த ரியல்மி போனில் உள்ளன.
6ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த புதிய ரியல்மி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி போன் வெளியாக உள்ளது.
ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 8000எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மிட்நைட் பிளாக் மற்றும் ஃபிளாஷ் ஆரஞ்சு நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி விலை
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி மாடலின் விலை ரூ.20,999-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி மாடலின் விலை ரூ.22,999-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி மாடலின் விலை ரூ.24,999-ஆக உள்ளது.
வரும் ஜூலை 22 முதல் ரியல்மி இந்தியா இணையதளம் மற்றும் அமேசான் மூலம் இந்த புதிய ரியல்மி போனை வாங்க முடியும். மேலும் இந்த போனின் அறிமுக சலுகையாக ரூ.500 கூப்பன் தள்ளுபடி மற்றும் ரூ.2000 பொதுத் தள்ளுபடியையும் கிடைக்கும். எனவே இந்த போனை ரூ.18,499 விையில் வாங்கிவிட முடியும்.


Click it and Unblock the Notifications