நாடே எதிர்பார்த்த ரியல்மி 5ஜி போன் வருகிறது.. 8000எம்ஏஎச் பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி (Realme Narzo 100x 5G) ஸ்மார்ட்போன் ஜூலை 15-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும். இப்போது ஆன்லைனில் கசிந்த ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Realme NARZO 100x 5G Specifications): 6.67-இன்ச் டிஸ்பிளே உடன் ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1200 நிட்ஸ் பிரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் புதிய ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 8எம்பி அல்லது 16எம்பி கேமராக்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி (MediaTek Dimensity 6300 5G chipset) உடன் ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.
12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) வசதியுடன் புதிய ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers) வசதிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
8000எம்ஏஎச் பேட்டரி உடன் ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

MIL-STD-810H இராணுவ தர சான்றிதழுடன் ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.
5300எம்எம் ஏர்ப்ளோவ் வேப்பர் சேம்பர் கூலிங் (Aiflow Vapor Chamber Cooling) வசதியுடன் ரியல்மி நார்சோ 100எக்ஸ் 5ஜி போன் வெளிவரும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் ரூ.30,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
photo credits: 91mobiles


Click it and Unblock the Notifications