Home
Mobile

அமேசான் சேல் 2026.. ஆஃபரில் ரியல்மி 5ஜி போன்.. IP64 ரேட்டிங்.. 7000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் தற்போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2026 (Amazon Great Indian Festival Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி (Realme Narzo 100 Lite 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

அதாவது அமேசான் சிறப்பு விற்பனையில் 4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் கிடைக்கும்.

அமேசான் சேல் 2026.. ஆஃபரில் ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி அம்சங்கள் (Realme Narzo 100 Lite 5G specifications): தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (Dimensity 6300 chipset) உடன் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் உள்ளது.

அதேபோல் 6.8-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி ஐபிஎஸ் டிஸ்பிளே உடன் இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 180Hz டச் சாம்பிளிங் ரேட், 900 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக 13எம்பி ரியர் கேமரா உடன் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் 1080P வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

அதுவும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(Side-mounted fingerprint sensor) வசதியுடன் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனில் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) ஆதரவும் உள்ளது. இதுதவிர MIL-STD-810H புரொடெக்சன் ஆதரவும் இதில் உள்ளது.

இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.3, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், குளோனாஸ், கலிலியோ (Galileo) யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

மேலும் 7000mAh பேட்டரி உடன் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
realme narzo 100 Lite 5G With 4GB RAM Gets Discount on Amazon Great Indian Festival 2026 Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X