நாளை களமிறங்கும் புதிய Realme 5ஜி போன்.. மலிவு விலை.. 7000mAh பேட்டரி.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி (Realme Narzo 100 Lite 5G) ஸ்மார்ட்போனை நாளை (ஏப்ரல் 14) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக நாளை மதியம் 12 மணி அளவில் இந்த போன் அறிமுகமாகும். அதேபோல் அமேசான் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும். இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி அம்சங்கள் (Realme Narzo 100 Lite 5G specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (Dimensity 6300 chipset) உடன் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

அதேபோல் 13எம்பி ரியர் கேமரா உடன் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன
குறிப்பாக 6.9-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 900 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதுவும் 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி வசதியுடன் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(Side-mounted fingerprint sensor) வசதியுடன் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த போனில் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7000mAh பேட்டரி உடன் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
MIL-STD-810H புரொடெக்சன் ஆதரவு இந்த போனில் உள்ளது. ரூ.13,000-க்கு கீழ் இந்த புதிய ரியல்மி போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








