Home
Mobile

ஏப்.14 வரை எந்த போனும் வாங்காதீங்க.. மலிவு விலையில் 7000mAh பேட்டரி.. வருகிறது ரியல்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி (Realme Narzo 100 Lite 5G) ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் 14-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி அம்சங்கள் (Realme Narzo 100 Lite 5G specifications): 13எம்பி ரியர் கேமரா உடன் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஏப்.14 வரை எந்த போனும் வாங்காதீங்க.. மலிவு விலையில் 7000mAh பேட்டரி..

6.9-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 900 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி வசதியுடன் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (Dimensity 6300 chipset) உடன் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(Side-mounted fingerprint sensor) வசதியுடன் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த போனில் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்.14 வரை எந்த போனும் வாங்காதீங்க.. மலிவு விலையில் 7000mAh பேட்டரி..

ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

மேலும் MIL-STD-810H புரொடெக்சன் ஆதரவு இந்த போனில் உள்ளது. ரூ.13,000 பட்ஜெட்டில் இந்த புதிய ரியல்மி போன் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும்.

photos credits: realme

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Narzo 100 Lite 5G Specifications, Price leaked ahead of India launch on April 14
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X