அமோக அமேசான் சேல்.. ரூ.12749 போதும்.. 7000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. புது NARZO போனுக்கு ஆஃபர்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் கிரேட் சம்மர் சேல் என்னும் சிறப்பு விற்பனையில் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இதில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் நம்ப முடியாத மலிவு விலைக்கு வாங்க கிடைக்கிறது. இதில் ரியல்மி நிறுவனத்தில் நார்சோ 5ஜி ஸ்மார்ட்போனும் தள்ளுபடியில் கிடைக்கிறது.
இப்போது, அமேசான் தளத்தில் 49 சதவீத தள்ளுபடி விலைக்கு ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி (Realme NARZO 100 Lite 5G) ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,748 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தகுதி வாய்ந்த பேங்க் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, மேலும் குறைந்த விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி அம்சங்கள் (realme NARZO 100 Lite 5G Specifications): 1570 x 720 பிக்சல்களுடன் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொடுக்கும்படி 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இதில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே மாடலாக உள்ளது.
180Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுத்துள்ளது. மேலும், 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 256 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. ஆகவே, பட்ஜெட் விலையிலும் அதிக ரெஃப்ரெஷ் ரேட் பெற்று கொள்ளலாம். தரமான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது.
இந்த சிப்செட்டுக்கு ஏற்ப அவுட்புட் கொடுக்கும்படி ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் பேக் செய்துள்ளது. 4 வருடங்களுக்கு ஸ்மூத் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மாடலாகவும் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) கிடைக்கிறது.
ஆகவே, இந்த பட்ஜெட்டிலும் லேட்டஸ்ட் பீச்சர்களை அணுக முடியும். ரியல்மி யுஐ 7.0 வழியாக ஏஐ பீச்சர்களையும் கேமரா மற்றும் மல்டி மீடியாவில் பயன்படுத்தி கொள்ளலாம். 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் 10X டிஜிட்டல் ஜூம் உள்ளது.
பட்ஜெட் மாடலாக இருப்பதால், 1080p வீடியோ ரெக்கார்டிங் மட்டுமே கொடுக்கப்பட்டு உள்ளது. குவாலிட்டியில் இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் பட்டையை கிளப்புகிறது. ஏனென்றால், டிஸ்பிளேவுக்கு ஆர்மர்ஷெல் புரொடெக்சன் (ArmorShell Protection) மற்றும் பாடிக்கு மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொண்ட MIL-STD 810H கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரியை பெற்று கொள்ளலாம். 8.4 எம்எம் தடிமன் மற்றும் 212 கிராம் எடை கொண்டுள்ளது. சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது. ப்ரோஸ்ட் சில்வர் (Frost Silver) மற்றும் தண்டர் பிளாக் (Thunder Black) கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications