வெளுத்து கட்டிய விற்பனை.. 42 சதவீத ஆஃபரில் 7000mAh பேட்டரி போன்.. 15W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் 7000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 15W ஃபாஸ்ட் சார்ஜிங், ஆர்மர்ஷெல் டிஸ்பிளே, மிலிட்டரி கிரேடு பாடி கிடைத்தால் விற்பனை வெளுத்து கட்டாமல் என்ன செய்யும். இப்படி நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி (realme NARZO 100 Lite 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
42 சதவீத தள்ளுபடியுடன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி மாடலானது பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது. ஆகவே, ரூ.14,520 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுக்கு ரூ.726 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.13,374 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி அம்சங்கள் (realme NARZO 100 Lite 5G Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போனில் பெற்று கொள்ளலாம். ரியல்மி யுஐ 7.0 (realme UI 7.0) உள்ளது.
மேலும், ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆர்மர்ஷெல் புரொடெக்சன் கொண்ட 6.8 இன்ச் (1570 x 720 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது.
இதுபோக எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 256 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொண்ட மாடலாகவும் இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கிடைக்கிறது.
மேலும், மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கிடைக்கும். இந்த பட்ஜெட்டிலும் கேமராவில் பட்டையை கிளப்பும்படி ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் 10X டிஜிட்டல் ஜூம் கொண்ட 13 எம்பி ரியர் கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த கேமராவுக்கு 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. வழக்கமாக கிடைக்கும் டூயல் வியூ வீடியோ (Dual view Video) உள்ளது. மேலும், போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), நைட் மோட் (Night Mode), சினிமாடிக் மோட் (Cinematic Mode) கிடைக்கிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 802.11 ஏசி மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரி உள்ளது. மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கொடுக்க MIL-STD 810H சர்டிபிகேஷன் உள்ளது.
மேலும், IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splah Resistant) கொண்டுள்ளது. ப்ரோஸ்ட் சில்வர் (Frost Silver) மற்றும் தண்டர் பிளாக் (Thunder Black) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம். இது ஸ்லிம் மற்றும் லைட் வெயிட் மாடல் கிடையாது. ஆகவே, 8.4 எம்எம் தடிமன் மற்றும் 212 கிராம் எடை கொடுக்கும்படி இருக்கிறது.


Click it and Unblock the Notifications