ஏப்.14 குறிச்சாச்சு.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. BYBASS சார்ஜிங்.. 144Hz டிஸ்பிளே.. 13MP கேமரா.. எந்த மாடல்?
ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி (Realme NARZO 100 Lite 5G) ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட் விலையில் 7000mAh பேட்டரி, பைபாஸ் சார்ஜிங், 144Hz டிஸ்பிளே மட்டுமல்லாமல், மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்டை கொடுக்க இருக்கிறது. இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் ரியல்மி நிறுவனத்தின் நார்சோ சீரிஸ் மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் லைட் மாடல்கள் பட்ஜெட்டில் கிடைப்பதால், விற்பனையிலும் பட்டையை கிளப்புகின்றன. இந்த வரிசையில் ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் சேர்ந்துள்ளது. வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதில் முக்கிய பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. பேட்டரி மற்றும் டிஸ்பிளேவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இருப்பது தெரிகிறது. ஏனென்றால், பெரிய பேட்டரி, பைபாஸ் சார்ஜிங் மட்டுமல்லாமல், விசி கூலிங் சிஸ்டம் கிடைக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே கிடைக்கிறது.
4 வருடங்களுக்கு ஸ்மூத் பர்ஃபாமென்ஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏஐ பீச்சர்கள் மற்றும் லேட்டஸ்ட் ப்ளக்ஸ் என்ஜின் கொண்ட மாடலாகவும் இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. பட்ஜெட்டில் கிடைக்க இருப்பதால், ரூ.15,000 பட்ஜெட்டுக்கும் கீழ் வெளியாக வாய்ப்புள்ளது. ரூ.13,000 பட்ஜெட்டில் ஆரம்ப விலை இருக்கலாம்.
ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி அம்சங்கள் (Realme NARZO 100 Lite 5G Specifications): 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட 6.9 இன்ச் டிஸ்பிளே கிடைக்கிறது. வாட்டர் டிராப் நாட்ச் மற்றும் 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளேவாக இருக்கிறது. டிசி டிம்மிங் (DC Dimming) கிடைக்கிறது. பெட்டைம் மோட், ஃபிளிக்கர் ஃப்ரீ டிம்மிங் கிடைக்கிறது.
ரூ.15,000 பட்ஜெட் செக்மெண்ட்டில் கிடைக்கும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 5300எம்எம் ஏர்ப்ளோவ் வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் (Airflow Vapor Chamber Cooling System) கிடைக்கிறது. 4 வருடங்களுக்கு ஸ்மூத் பர்ஃபாமென்ஸ் கொடுக்கிறது.
2 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி 7000mAh டைட்டன் பேட்டரியை இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. கேமிங் பிரியர்கள் விரும்பும்படி பைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) கொடுக்கப்பட்டு உள்ளது. கூடுதலாக ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) கொடுக்கப்பட்டு உள்ளது. 6 வருடங்களுக்கு பேட்டரி ஹெல்த் வாரண்டி கிடைக்கிறது.
ரியல்மி நிறுவனத்தின் புதிய ப்ளக்ஸ் என்ஜின் கிடைக்கிறது. முந்தைய மாடல்களைவிட 20 சதவீத ஃபாஸ்டர் ரெஸ்பான்ஸ், 29 சதவீத ஆப் ஸ்க்ரோலிங் கூடுதலாக கிடைக்கும். மேலும், ஏஐ பூஸ்ட் (Ai Boost( சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. தண்டர் பிளாக் (Thunder Black), ப்ரோஸ்ட் சில்வர் (Frost Silver) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. ஸ்டீம்லைன்டு கர்வ் டிரான்சிஷன் டிசைன் கிடைக்கிறது.
13 எம்பி ரியர் கேமராவை இந்த ரியல்மி நார்சோ 100 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஏஐ ஸ்மார்ட் இமேஜ் (Ai Smart Image) சப்போர்ட் கிடைக்கிறது. இதில் ஏஐ எரைசர் 2.0, ஏஐ கிளியர் பேஸ், ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் உள்ளிட்ட பீச்சர்களையும் இந்த கேமரா கொடுத்து உள்ளது. ஐபி64 ரேட்டிங் மற்றும் ஸ்மார்ட் டச் 2.0 கொடுக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகிறது.


Click it and Unblock the Notifications








