ரூ.11,999-க்கு 48 எம்பி பின்புற மற்றும் 16 எம்பி செல்பி கேமரா: Realme Narzo 10 விற்பனை தொடக்கம்!

|

ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போன் பக்கா பட்ஜெட் விலையோடு இன்று விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 48 எம்பி உட்பட நான்கு பின்புற கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வசதியோடு விற்பனைக்கு வந்துள்ளது.

ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போன்

ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போன்

ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போன் விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது. ஃபிளாஷ் விற்பனை பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் மூலம் நடத்தப்படுகிறது. கடந்த மே மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாதனம் பல ஃபிளாஷ் விற்பனை நடத்தப்பட்டது. இந்த சாதனம் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது, 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் நான்கு கேமராக்களை இந்த சாதனம் கொண்டுள்ளது.

ரியல்மி நார்சோ 10 விலை விவரங்கள்

ரியல்மி நார்சோ 10 விலை விவரங்கள்

ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஒரே வேரியண்டில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த சாதனத்தின் விலை ரூ.11,999 ஆகும். ஸ்மார்ட்போன் தட் ப்ளூ, தட் கிரீன் மற்றும் தட் ஒயிட் போன்ற வண்ண விருப்பங்களில் கிடைக்கும். இந்த சாதனம் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. பயணம் மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது.

வாட்டர்டிராப் நாட்ச் வடிவமைப்பு

வாட்டர்டிராப் நாட்ச் வடிவமைப்பு

ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் கட்டமைப்போடு வாட்டர்டிராப் நாட்ச் வடிவமைப்போடு கிடைக்கிறது. இதில் பிங்கர் பிரிண்ட் சென்சார் வடிவமைப்பு மற்றும் க்வாட் கேமரா அறிமுகத்தோடு கிடைக்கிறது.

720*1600 பிக்சல் எல்சிடி ஸ்கிரீன் டிஸ்ப்ளே

720*1600 பிக்சல் எல்சிடி ஸ்கிரீன் டிஸ்ப்ளே

அதோடு இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி ப்ளஸ் 720*1600 பிக்சல் எல்சிடி ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் விவரம் 20:9 என்ற அளவீடோடு பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது.

பிரமாண்ட மர்ம பள்ளம்: இது 9-வது முறை., நீடிக்கும் அதீத மர்மங்கள்- உறைந்தபோகும் விஞ்ஞானிகள்!பிரமாண்ட மர்ம பள்ளம்: இது 9-வது முறை., நீடிக்கும் அதீத மர்மங்கள்- உறைந்தபோகும் விஞ்ஞானிகள்!

க்வாட் ரியர் கேமரா அமைப்பு

க்வாட் ரியர் கேமரா அமைப்பு

அதோடு ரியில்மி நார்சோ 10 ஸ்மார்ட்போனில் க்வாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 48 எம்பி மெயின் சென்சார் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா வடிவமைப்போடு கிடைக்கிறது. இதில் 16 எம்பி செல்பி கேமராவோடு விற்பனைக்கு வந்துள்ளது.

மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி

மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி

ரியல்மி 10 ஸ்மார்ட் போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி, 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. மேலும் இந்த ஹேன்ட்செட் மொபைல் போன்கள் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான யு1 1.0 மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி உடன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு கிடைக்கிறது.

டைப் சி போர்ட்

டைப் சி போர்ட்

அதோடு வைபை 802.11, ப்ளூடூத் 5.0, ஹெட்போன் ஜேக் மற்றும் டைப் சி போர்ட் ஆகியவையோடு கிடைக்கிறது. இந்த பட்ஜெட் விலையில் கிடைப்பதால் இதற்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.11,999-க்கு விற்பனை

ரூ.11,999-க்கு விற்பனை

ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போனானது 4ஜி மற்றும் 128 ஜிபி வேரியண்ட் வசதியோடு ரூ.11,999-க்கு விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவர்கள் பிளிப்கார்ட் மர்றும் ரியல்மி.காம்-ல் வாங்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme narzo 10 sale start in today via flipkart and Realme.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X