48 எம்பி நாலு கேமரா, 16 எம்பி செல்பி:Realme Narzo 10 விற்பனை ஆரம்பம்., பக்கா பட்ஜெட் விலை!
ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போன் பக்கா பட்ஜெட் விலையோடு இன்று விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 48 எம்பி நாலு கேமரா, 16 எம்பி செல்பி கேமரா வசதியோடு விற்பனைக்கு வந்துள்ளது.

ரியல்மி நார்சோ 10
ரியல்மி பட்ஜெட் விலை போனான ரியல்மி நார்சோ 10 இந்தியாவில் இன்று 12 மணிமுதல் விற்பனைக்கு வந்துள்ளது. பிளிப்கார்ட் வழியாக இந்த மொபைல் போனை நீங்கள் வாங்கலாம்.

கடந்த மாத இறுதியில் அறிமுகம்
பிளிப்கார்டில் விற்பனைக்கு வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது கடந்த மாதம் இறுதியில் நார்சோ 10ஏ உடன் அறிமுகம் செய்யப்பட்டது.

பிங்கர் பிரிண்ட் சென்சார்
ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் கட்டமைப்போடு வாட்டர்டிராப் நாட்ச் வடிவமைப்போடு கிடைக்கிறது. இதில் பிங்கர் பிரிண்ட் சென்சார் வடிவமைப்பு மற்றும் க்வாட் கேமரா அறிமுகத்தோடு கிடைக்கிறது.

ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி ப்ளஸ்
அதோடு இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி ப்ளஸ் 720*1600 பிக்சல் எல்சிடி ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் விவரம் 20:9 என்ற அளவீடோடு பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது.

48 எம்பி மெயின் சென்சார் கேமரா
அதோடு ரியில்மி நார்சோ 10 ஸ்மார்ட்போனில் க்வாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 48 எம்பி மெயின் சென்சார் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா வடிவமைப்போடு கிடைக்கிறது. இதில் 16 எம்பி செல்பி கேமராவோடு விற்பனைக்கு வந்துள்ளது.

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி
ரியல்மி 10 ஸ்மார்ட் போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி, 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. மேலும் இந்த ஹேன்ட்செட் மொபைல் போன்கள் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான யு1 1.0 மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி உடன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு கிடைக்கிறது.

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்
அதோடுவைபை 802.11, ப்ளூடூத் 5.0, ஹெட்போன் ஜேக் மற்றும் டைப் சி போர்ட் ஆகியவையோடு கிடைக்கிறது. இந்த பட்ஜெட் விலையில் கிடைப்பதால் இதற்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.11,999-க்கு விற்பனை
ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போனானது 4ஜி மற்றும் 128 ஜிபி வேரியண்ட் வசதியோடு ரூ.11,999-க்கு விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவர்கள் ரூ.500 சூப்பர் கேஷ் சலுகை மொபிக்விக் மூலம் ரியல்மி.காம்-ல் வாங்கும் போது கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications