Realme Narzo 10: பிரத்யேக ப்ளூ வண்ணத்தின் விற்பனை தேதி அறிவிப்பு!

|

Realme Narzo 10 ஸ்மார்ட்போனின் பிரத்யேக ப்ளூ கலர் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ரியல்மி நர்சோ 10 ஸ்மார்ட்போன்

ரியல்மி நர்சோ 10 ஸ்மார்ட்போன்

இந்தியாவில் ரியல்மி நர்சோ 10 ஸ்மார்ட்போனின் ப்ளூ நிற விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசியானது தற்போது வரை கிரீன் மற்றும் வெள்ளை நிறங்களில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

ஜூன் 30 அன்று மதியம் 12 மணிக்கு

ஜூன் 30 அன்று மதியம் 12 மணிக்கு

ரியல்மி இந்தியா தளம் மற்றும் பிளிப்கார்ட் மூலமாக ஜூன் 30 அன்று மதியம் 12 மணிக்கு (நண்பகல்) விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

வாட்டர்டிராப் நாட்ச் வடிவமைப்பு

வாட்டர்டிராப் நாட்ச் வடிவமைப்பு

ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போனானது கடந்த மாதம் இறுதியில் நார்சோ 10ஏ உடன் அறிமுகம் செய்யப்பட்டது. ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் கட்டமைப்போடு வாட்டர்டிராப் நாட்ச் வடிவமைப்போடு கிடைக்கிறது. இதில் பிங்கர் பிரிண்ட் சென்சார் வடிவமைப்பு மற்றும் க்வாட் கேமரா அறிமுகத்தோடு கிடைக்கிறது.

6.5 இன்ச் ஹெச்டி ப்ளஸ்

6.5 இன்ச் ஹெச்டி ப்ளஸ்

இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி ப்ளஸ் 720*1600 பிக்சல் எல்சிடி ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் விவரம் 20:9 என்ற அளவீடோடு பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைத்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ப்ளூ நிறத்தின் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கிம் ஜாங்-உன் இன் சட்டவிரோத வாழ்க்கை அம்பலம்! அடிமைகளின் கோட்டையாக இருக்கும் 'ஆபீஸ் 39'.!கிம் ஜாங்-உன் இன் சட்டவிரோத வாழ்க்கை அம்பலம்! அடிமைகளின் கோட்டையாக இருக்கும் 'ஆபீஸ் 39'.!

48 எம்பி மெயின் சென்சார் கேமரா

48 எம்பி மெயின் சென்சார் கேமரா

ரியில்மி நார்சோ 10 ஸ்மார்ட்போனில் க்வாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 48 எம்பி மெயின் சென்சார் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா வடிவமைப்போடு கிடைக்கிறது. இதில் 16 எம்பி செல்பி கேமராவோடு விற்பனைக்கு வந்துள்ளது.

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி

ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட் போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி, 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. மேலும் இந்த ஹேன்ட்செட் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான யு1 1.0 மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி உடன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு கிடைக்கிறது.

பல்வேறு சிறப்பம்சங்கள்

பல்வேறு சிறப்பம்சங்கள்

வைபை 802.11, ப்ளூடூத் 5.0, ஹெட்போன் ஜேக் மற்றும் டைப் சி போர்ட் ஆகியவையோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் இதற்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என தெரிகிறது.

Best Mobiles in India

English summary
Realme Narzo 10 Blue version sale date announced in india

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X