Home
Mobile

பிளிப்கார்ட், அமேசான்: ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு இந்த விலைகுறைப்பு சலுகையில் ரூ.1000 வரை விலைகுறைக்கப்படும்.

ரியல்மி நிறுவனம் Realme Mobile Bonanza sale என்ற தலைப்பில் ரியல்மி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பினபு இந்த விலைகுறைப்பு சலுகை மார்ச் 25-ம் தேதி முதல்
மார்ச் 28-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

மேலும் அமேசான், பிளிப்கார்ட், ரியல்மி.காம் என்ற ஆன்லைன் தளங்களில் இந்த விலைகுறைப்பு சலுகை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி 3:

ரியல்மி 3:

ரியல்மி 3 ஸ்மார்ட்போன் மாடலை தேர்வு செய்த வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் ரூ.500 வரை விலைகுறைக்கப்படும். அதன்படி 3ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. பின்பு 4ஜிபி ரேம் கொண்ட ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது.

ரியல்மி 2 ப்ரோ:

ரியல்மி 2 ப்ரோ:

ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு இந்த விலைகுறைப்பு சலுகையில் ரூ.1000 வரை விலைகுறைக்கப்படும். அதன்படி 4ஜிபி ரேம் கொண்ட ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.11,990-விலையில் விற்பனைக்கு வரும். அதேபோல் ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் கொண்ட மாடல்களுக்கு விலைகுறைக்கப்பட்டுள்ளது.

ரியல்மி யூ1 :

ரியல்மி யூ1 :

ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த 3ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனை 9,999-விலையில் வாங்க முடியும். பின்பு 4ஜிபி ரேம் கொண்ட ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் மாடலை ரூ.12,999-விலையில் வாங்க முடியும். பின்பு இப்போது ரியல்மி யூ1 ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.

ரியல்மி யூ1 டிஸ்பிளே:

ரியல்மி யூ1 டிஸ்பிளே:

ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 19:5:9 என்ற திரைவிகதிம் மற்றும் 1080x2340 பிக்சல் திர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி யூ1 மென்பொருள் :

ரியல்மி யூ1 மென்பொருள் :

இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் தயாரிப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி மீடியாடெக் ஹெலியோ பி70 ஆக்டோ-கோர் சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.

சேமிப்பு:

சேமிப்பு:

ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் மாடல் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கைரேனை சென்சார், பேஸ் அன்லாக் வசதி போன்ற பல்வேறு ஆதரவுகள்
கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

கேமரா:

கேமரா:

ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 16எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 25எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. எனவே மிகத்துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்த ஸ்மார்ட்போனின் மூலம் எடுக்க முடியும்.

பேட்டரி:

பேட்டரி:

ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 3500எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு வைஃபை, ப்ளூடூத், மைக்ரோ யுஸ்டி-போர்ட், ஒடிஜி ஆதரவு, 3.5எம்.எம் ஆடியோ ஜாக், ஜிபிஎஸ் மற்றும் பல்வேறு சென்சார் ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Realme Mobile Bonanza sale: Realme 3, Realme U1 and Realme 2 Pro to be available on discounts : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X