இல்ல புரியல., அப்படி என்ன இருக்கு அதுல- ரியல்மி சி21ஒய் ஸ்மார்ட்போன் விலை அதிகரிப்பா?
ரியல்மி நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரிவில் பிரபலமாக இருப்பது ரியல்மி சி21 ஒய் மாடல், இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சமீபத்திய அறிக்கையின்படி, சி21ஒய் மாடலின் விலையை அதிகரிக்க ரியல்மி நிறுவனம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. சாதனத்தின் உதிரிபாக பற்றாக்குறை தொடங்கியதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த பற்றாக்குறை ப்ரீமியம் ரக சாதனங்களை பாதிக்காத வகையில் நிறுவனம் கவனமாக செயல்படுகிறது. இந்த நெருக்கடியை சமாளிக்க நிறுவனம் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை குறிவைத்து விலை ஏற்றத் தொடங்குகின்றன. இதனால் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை நம்பியிருக்கும் வாடிக்கையாளர்களே பாதிக்கப்படுகின்றனர்.

ரூ.1000 வரை அதிகரிக்கலாம்
ரியல்மி அறிமுகப்படுத்திய சமீபத்திய ஸ்மார்ட்போனகளில் ஒன்றாக சி21ஒய் இருக்கிறது. சி21ஒய் பட்ஜெட் வகைகளில் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இந்த சாதனத்தை வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் இந்த சாதனத்தை காத்திருந்து வாங்கினால் விலை உயர்வை சந்திக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. விலை சுமார் ரூ.1000 வரை அதிகரிக்கலாம் என்பது துறிப்பிடத்தக்கது.

ரியல்மி சி11 2021 மாடலின் விலை
ரியல்மி சி11 2021 மாடலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மற்றொரு சி சீரிஸ் சாதனத்தின் விலையை அதிகரிக்க நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரியல்மி சி21 ஒய் சாதாரண அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம்
இந்தியாவில் தற்போது ரியல்மி சி21ஒய் ஸ்மார்ட்போனின் இரண்டு வேரியண்ட்கள் இருக்கின்றன. 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. ரியல்மி சி21ஒய் ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி வேரியண்ட் விலை ரூ.8999 ஆக இருக்கிறது. அதேபோல் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் ரூ.9999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை தலா ரூ.1000 வரை அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விலை அதிகரிக்கும் பட்சத்தில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி வேரியண்ட் விலை ரூ.9,999 ஆக இருக்கிறது. அதேபோல் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் ரூ.10,999 ஆக இருக்கும். திருத்தப்பட்ட கட்டணம் அடுத்த வாரம் முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. ரியல்மி சி21 ஒய் சாதனத்தின் வண்ண மாறுபாடுகள் அப்படியே இருக்கும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ரியல்மி சி21 ஒய் அம்சங்கள்
ரியல்மி சி21 ஒய் அம்சங்கள் குறித்து பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ரியல்மி யூஐ மூலம் இயங்குகிறது. ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ரியல்மி யுஐ 3.0 கொண்டு வரும் என கூறப்படுகிறது.

ரியல்மி சி21 ஒய் இந்தியா விற்பனை
ரியல்மி சி21 ஒய் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் மூன்று கேமரா வசதி இருக்கிறது. மேலும் இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது. யுனிசாக் டி610 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 20:9 விகித வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே உடன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் சதுர வடிவத்தில் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்
பாதுகாப்பு அம்சத்துக்கு பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இதில் இருக்கிறது. இதில் பிரத்யேக சூப்பர் பவர் சேமிப்பு பயன்முறை இருக்கிறது. இதை ஆக்டிவேட் செய்யும் போது ஐந்து சதவீத பேட்டரியுடன் 2.33 நாட்கள் நீட்டிப்பு ஆதரவை வழங்குகிறது. ரியல்மி சி21 ஒய் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யுஐ-ல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே மற்றும் 720x1,600 பிக்சல்கள் தீர்மானத்தோடு வருகிறது. இது 20: 9 விகிதத்தை கொண்டிருக்கிறது.

64 ஜிபி உள்சேமிப்பு வசதி
இந்த ஸ்மார்ட்போனானது யூனிசோக் டி610 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 4 ஜிபி ரேம் அம்சத்தோடு இது வருகிறது. ரியல்மி சி21 ஒய் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. ரியல்மி சி21 ஒய் சாதனத்தை பொறுத்தவரை இதில் மூன்று பின்புற கேமரா அம்சம் இருக்கிறது. இதில் 13 மெகாபக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் மோனக்ரோம் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் வசதியோடு வருகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ வசதிக்கென முன்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.
ரியல்மி சி21 ஒய் சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது. ரியல்மி சி21 ஒய் இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை இதில் 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5, மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகிய ஆதரவுகள் இருக்கிறது. மேலும் பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் வசதி இருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி
இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் யூனிசாக்ஸ் டி610 செயலி மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இதில் கூடுதல் மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. இது டியர் டிராப் நாட்ச் வசதியையும், 400 நிட்ஸ் உச்ச நிலை பிரகாசத்தையும் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரதான கேமரா, முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியோடு வருகிறது. ரியல்மி நிறுவனம் மட்டுமின்றி தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் விலை உயர்வை அறிவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications