Home
Mobile

பல 5G போன்களை ஓரங்கட்டி அடிக்கும் விலையில்.. Realme 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

வரும் நவம்பர் 17-ம் தேதி ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது ரியல்மி நிறுவனம். ஆனால் அதற்கு முன்பே சத்தமின்றி ரியல்மி 10 5ஜி எனும் ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ரியல்மி நிறுவனம்.

ரியல்மி 10 5ஜி

ரியல்மி 10 5ஜி

குறிப்பாக இந்த Realme 10 5G ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது இந்தரியல்மி 10 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி 10 5ஜி ஸ்மார்ட்போனின் விலை

ரியல்மி 10 5ஜி ஸ்மார்ட்போனின் விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி 10 5ஜி ஸ்மார்ட்போனின் விலை CNY 1,299 (இந்திய மதிப்பில் ரூ.14,700) ஆக உள்ளது. மேலும் இதன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை CNY 1,599 (இந்திய மதிப்பில் ரூ.18,000) ஆக உள்ளது.

குறிப்பாக கோல்ட் மற்றும் பிளாக் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போன் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

Realme 10 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது.

மேலும் 20.06:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எல்சிடி டிஸ்பிளே என்பதால் ஒரு தனித்துவமான திரை அனுபவம் கிடைக்கும்.

Dimensity 700 சிப்செட்

Dimensity 700 சிப்செட்

குறிப்பாக இந்த ரியல்மி போன் தரமான மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் கேமிங் பயனர்கள் இந்த ரியல்மி 10 5ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

ஆண்ட்ராய்டு 12

அதேபோல் Realme UI 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன். மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுகளைக் கொண்டுள்ளது ரியல்மி 10 5ஜி ஸ்மார்ட்போன்.

50எம்பி மெயின் கேமரா

50எம்பி மெயின் கேமரா

Realme 10 5G ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் + ஏஐ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்தஅசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் தெளிவான படங்களை எடுக்க முடியும்.

33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ரியல்மி 10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதேசமயம் இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி

டூயல் சிம் ஆதரவு, 5ஜி, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், புளூடூத் 5.2, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி 10 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக பட்ஜெட் விலையில் ஒரு நல்ல 5ஜி போன் வாங்க நினைக்கும் பயனர்கள் இதை தேர்வு செய்வது நல்லது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Realme Launched New budget Price 5G Smartphone with 5000mAh Battery and 50MP Camera: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X