கிச்சானாலே இளிச்சவாயன் தானே.. வெறும் ரூ.8000 பட்ஜெட்டில் iPhone டிசைனில் புதிய Realme போன் அறிமுகம்!
ஆப்பிளுக்கும் (Apple) ரியல்மிக்கும் (Realme) என்ன பஞ்சாயத்து என்றே தெரியவில்லை. வெறும் ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அச்சு அசலாக ஐபோன் 14 ப்ரோவை (iPhone 14 Pro) போலவே இருக்கும் ஒரு புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரியல்மி நிறுவனம் அதன் நார்சோ சீரிஸின் கீழ் ரியல்மி நார்சோ என்53 (Realme Narzo N53) என்கிற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro) மாடல்களில் உள்ள டைனமிக் ஐலேண்ட் (Dynamic Island) அம்சத்தை பிரதிபலிக்கும் மினி கேப்சூல் (Mini Capsule) அம்சத்தை கொண்டுள்ளது.

அதுமட்டுமா? பேக் பேனலில் (Back Panel) ஐபோன் சீரிஸின் ப்ரோ மாடல்களில் இருப்பதை போலவே ரியர் கேமரா (Rear Camera) டிஸைனையும் பெற்றுள்ளது. இதுபோன்ற "காப்பி அடிக்கப்பட்ட" அம்சங்களை தவிர்த்து ரியல்மி நார்சோ என்53 ஆனது தனக்கே சொந்தமான ஒரு சிறப்பம்சத்தையும் கொண்டுள்ளது.
இது 7.49 மிமீ என்கிற அளவில் மிகவும் மெல்லிய வடிவமைப்பை (Slim Design) பெற்றுள்ளது. ரியல்மியின் கூற்றுப்படி நார்சோ என்53 தான் இதுவரை வெளியான ரியல்மி போன்களிலேயே மிகவும் மெலிதான ஸ்மார்ட்போனாகும். மேலும் இது யுனிசாக் டி612 சிப்செட், 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களையும் பேக் செய்கிறது.
ரியல்மி நார்சோ என்53 விலை, விற்பனை மற்றும் சலுகை: ஃபெதர் பிளாக் (Feather Black) மற்றும் ஃபெதர் கோல்ட் (Feather Gold) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நார்சோ என்53 ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் (Storage Options) வாங்க கிடைக்கும்.
4ஜிபி ரேம் + 64ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி வேரியண்ட்கள் முறையே ரூ.8,999 மற்றும் ரூ.10,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளன. ரியல்மி நார்சோ என்53 மீதான விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, எச்டிஎஃப்சி (HDFC) பேங்க் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.1000 வரையிலான தள்ளுபடியை பெறலாம்.
இது வருகிற மே 24 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ரியல்மி ஆன்லைன் ஸ்டோர் (Realme Online Store) மற்றும் அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும். சுவாரசியமாக, இந்த போனின் முதல் விற்பனையின் போது, பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது ரூ.500 மற்றும் ஹை-எண்ட் வேரியண்ட் மீது ரூ.1000 என்கிற கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும்.
ரியல்மி நார்சோ என்53 அம்சங்கள்: இது 90 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டை (90Hz Refresh Rate) ஆதரிக்கும் 6.74-இன்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, இது ஆக்டா-கோர் யுனிசாக் டி612 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இதிலுள்ள 128ஜிபி வரையிலான ரோம்-ல் இருந்து 6ஜிபி-ஐ விர்ச்சுவல் ரேம் ஆகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ (Android 13 OS) அடிப்படையாக கொண்ட ரியல்மி யுஐ 4.0 (Realme UI 4.0) உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் ஏஐ மெயின் கேமராவுடன் (AI Main Camera) ஒரு இரண்டாம் நிலை கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் உள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, வாட்டர் டிராப் நாட்ச்சில் 8எம்பி செல்பீ கேமரா உள்ளது.
மேலும் இது 33W வயர்டு சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது, நிறுவனத்தின் கூற்றுப்படி இது 30 நிமிடங்களில் போனை பூஜ்ஜியத்தில் இருந்து 50 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யும் என்று கூறுகிறது. கடைசியாக இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் (Finger Print) சென்சாரையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








